இயற்கை, யோகா மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை (அக். 19ஆம் தேதி) கடைசித் தேதி ஆகும். முழுக்க முழுக்க 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும் மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படாது.


இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி? பார்க்கலாம். 


என்ன தகுதி?


* தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு வெளியே படித்த தேர்வர்கள், இருப்பிடச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். 


* டிசம்பர் 31, 2022-ன் படி, 17 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். 


* இயற்பியல், வேதியியல், உயிரியல் பிரிவில் படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு இயற்கை, யோகா மருத்துவப் படிப்பில் சேர அனுமதி இல்லை. 


* அறிவியல் பாடங்களில் ஓ.சி. பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களை எடுத்திருக்க வேண்டும். பிசி, பிசி முஸ்லிம் பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்களும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.சி அருந்ததியர், எஸ்.டி பிரிவினர் 35 சதவீத மதிப்பெண்களைப் பெற்றால் போதுமானது. 


என்னென்ன தகவல்கள் முக்கியம்?


• 12ஆம் வகுப்பு பதிவு எண்
• தேர்வரின் பெயர்
• பிறந்த தேதி
• கைபேசி எண்
• மாநிலம்
ஆகியவற்றைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்பக் கட்டணம்


* பொதுப் பிரிவினருக்கு ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
* எஸ்சி, எஸ்சி அருந்ததியர், எஸ்டி உள்ளிட்ட சிறப்புப் பிரிவினர் ரூ.100 விண்ணப்பக் கட்டணம் செலுத்தினால் போதும். 


https://www.onlinesbi.sbi/sbicollect/icollecthome.htm?corpID=2846956 என்ற இணைப்பு மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். 


தேர்வர்கள் தாங்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை,
Application for admission to B.N.Y.S. Medical Degree course என்று தலைப்பில் எழுதி, 


தேர்வுக் குழு,
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர்,
அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவ வளாக மருத்துவமனை,
அரும்பாக்கம், சென்னை - 600 106 என்ற முகவரிக்கு நாளை (அக். 19ஆம் தேதி)  மாலை 5.30 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். உடன், சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். 


கூடுதல் தகவல்களுக்கு: https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N22103675.pdf


தகுதிவாய்ந்த தேர்வர்களின் தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு அட்டவணை உள்ளிட்ட தகவல்கள் www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியாகும். 


இதையும் வாசிக்கலாம்:   PSTM Certificate: இனி ஆன்லைனில் மட்டுமே தமிழ்வழிச் சான்றிதழ்; பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு