மத்திய அரசின் வீடு இல்லாதவருக்கு வீடு கட்ட பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வீடு இல்லாதவர்களுக்கு ரூபாய் 2 லட்சத்து 10 ஆயிரம் மானியமாக மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த வட அகரம் ஊராட்சியில் 5 ஏழை எளிய பயனாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தவனையாக 26 ஆயிரம் ரூபாய் அரசு சார்பில் கொடுக்கப்பட்டது. அதில் இருந்து இதுவரை எந்த பணம் கொடுக்கவில்லை எனவும் மேலும் அதிகாரிகளிடம் சென்று கோட்ட போது உங்களுக்கு பணம், சிமெண்ட் மற்றும் கம்பிகள் உள்ளிட்டவை கொடுத்தாச்சு எனவும் கூறி அனுப்பி விட்டதாக  பயனாளிகள் புலம்புகின்றனர் .


மேலும் அவர்கள் அது போன்று எந்த பணமும் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களும் வாங்கவில்லை எனவும் இதில் ஏதோ முறைகேடு நடந்ததாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டதாகவும் அந்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பயனாளிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். தினக்கூலி சென்றுவரும் தங்களை அதிகாரிகள் இப்படி 2 வருடங்களாக அலையவிடுவதாகவும் இதைப்பற்றி உயர்அதிகாரிகளிடம் தெரிவித்தால் மிரட்டும் தொனியில் பேசுவதாகவும் பயனாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


வீடு கட்டவில்லை என பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியர் இதுபோன்று குற்றச்சம்பங்களுக்கு செவி சாய்க்காமல் இருப்பது கவலையை ஏற்படுத்துவதாக பொது மக்கள் கூறுகின்றனர் மேலும் பல பயனாளிகளுக்கு வீடு கட்டி முடித்தாலும் அதற்கான தொகை மற்றும் மூலப்பொருள் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், இது தொடர்பாக எத்தனை முறை மனு அளித்தலும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை எனவும் இந்த போக்கு தொடந்து நீடித்தால் மரக்காணத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் எனவும் பயனாளிகள் கூறுகின்றனர்.