இந்தியாவின் முதல் பெண் முஸ்லீம் ஆசிரியை என்று அறியப்படும் பாத்திமா ஷேக்கின் பங்களிப்பை, பாடமாக ஆந்திரப் பிரதேச அரசு எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.


ஃபாத்திமா ஷேக்


இந்தியாவின் தலைசிறந்த சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் கல்வியாளர்களைப் பற்றி அதிகம் அறியப்படாத நேரத்தில், ஆந்திர அரசு பாடப்புத்தகத்தில் இதுபோன்ற பாடங்களை வைத்திருப்பது பாராட்டுக்களை பெற்று வருகிறது. சீர்திருத்தவாதி ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலே, நன்கு அறியப்பட்ட சமூக சீர்திருத்த தம்பதிகள் ஆவார்கள், அவர்கள் தங்கள் குடும்பங்களில் இருந்து விலக்கப்பட்டபோது அவர்களுக்கு ஃபாத்திமா ஷேக் அடைக்கலம் கொடுத்ததாக அறியப்படுகிறது. 1848 ஆம் ஆண்டு பூலே தம்பதியினர் சாதி அமைப்பு மற்றும் ஆண் பேரினவாதத்திற்கு எதிராக முன்முயற்சி எடுத்தனர். பம்பாய் பிரசிடென்சியில் உள்ள முன்னாள் பூனாவில் ஃபுலே தம்பதி, தன் வீட்டில் முதல் பெண்கள் பள்ளியைத் தொடங்க அனுமதித்த பெருமை பாத்திமா ஷேக்கிற்கு உண்டு.



ஆசிரியராக…


ஃபுலே தம்பதி நடத்திய ஐந்து பள்ளிகளிலும் பாத்திமா ஷேக் கற்பித்தார். அதே சமயம் மும்பையில் 1851ல் சொந்தமாக இரண்டு பள்ளிகளை நிறுவினார். ஃபாத்திமா ஷேக், அமெரிக்க மிஷனரியான சிந்தியா ஃபாரரால் நடத்தப்படும் ஒரு கல்வி நிறுவனத்தில் சாவித்ரிபாய் பூலேவுடன் சேர்ந்து ஆசிரியர் பயிற்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்: MS Dhoni: சூதாட்ட புகார், புகழுக்கு களங்கம்.. ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக களமிறங்கிய தோனி வழக்குப்பதிவு..


அங்கீகாரம்


ஜனவரி 9, 1831 இல் பிறந்த அவருக்கு இதுவரை உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் சென்றடையாத அறியப்படாத கல்வி ஆர்வலர். ஆந்திரப் பிரதேசத்திற்கு முன்பு, மகாராஷ்டிர பாடப்புத்தக ஆணைய, பள்ளி பாடத்திட்டத்தில் அவரைப் பற்றிய சுருக்கமான பாடத்தை அறிமுகப்படுத்தியது. மறுபுறம், கூகுள் அவரது 191-வது பிறந்தநாளை முன்னிட்டு தனது முகப்புப் பக்கத்தில் டூடுல் மூலம் கௌரவித்துள்ளது.



ஆந்திர அரசுக்கு பாராட்டு


நாட்டின் எதிர்காலமாக இருக்கும் குழந்தைகள், சீர்திருத்தவாதிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய பிறரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எட்டாம் வகுப்பு புத்தகத்தில் பாடம் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பாத்திமா ஷேக்கின் பங்களிப்பு குறித்து இன்னும் அதிக விழிப்புணர்வு தேவை,” என்று ஆந்திரப் பிரதேசம் முதன்மை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் காக்கி பிரகாஷ் ராவ் தெரிவித்தார்.


ஆந்திர ஐக்கிய ஆசிரியர் கூட்டமைப்புத் தலைவர் டி. ராமு, ”ஆந்திர அரசின் இந்த முயற்சியைப் பாராட்டி, பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்வது பெரும் பாவமாகக் கருதப்பட்டது. பல பழமைவாத, சாதிவெறி மற்றும் மதவெறி அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் அச்சுறுத்தல்களை புறக்கணிக்க தலித் மற்றும் முஸ்லீம் சிறுமிகளுக்கு கற்பிப்பதில் ஃபுலே தம்பதியருடன் பாத்திமா ஷேக் முக்கிய பங்கு வகித்தார்” என்று தெரிவித்துள்ளார்.