பல்கலைக்கழங்களில் மாணவர்கள் அவரவர் தாய்மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கபட வேண்டும் என்று பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு யு.ஜி.சி. சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக நாட்டில் உள்ள பலகலைக்கழகங்களில் மாணவர்கள் அந்தந்த உள்ளூர் மொழிகளில் பருவத் தேர்வுகளை எழுதிட அனுமதிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக யு.ஜி.சி. தலைவர் ஜெகதீஷ் குமார் துணை வேந்தர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்.” உயர்கல்வி மாணவர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கினை வகிக்கிறது. அப்படியிருக்கையில்,அவர்களின் திறன் மேம்பாட்டிற்கு மாணவர்கள் உள்ளூர் மொழியில் தேர்வு எழுத அனுமதிப்பது அவர்களின் எதிர்கால நலனிற்கு பலம் சேர்ப்பதாக அமையும். ஆங்கில வழிக் கல்வி என்ற நடைமுறை பின்பற்றப்பட்டாலும், பல்கலைக்கழகங்களில் தாய்மொழியில் / உள்ளூர் மொழியில் கல்வி கற்பிப்பது, தேர்வு எழுதுவது உள்ளிட்டவற்றை நிர்வாகம் ஊக்குவிக்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், அவரவர் தாய்மொழியில் கற்றல் நடைமுறை இருப்பதும் மாணவர்களுக்கு கூடுதல் பயனளிக்கக் கூடியது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க..
தன்பாலின திருமண வழக்கில் உச்சநீதிமன்றம் புதிய அதிரடி..! சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அனுமதியா?