சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் அதிகளவில் அரிவாள் தயாரிக்கப்படுவது வழக்கம். போலீஸார் கெடுபிடியால் வீச்சரிவாள் தயாரிப்பதை நிறுத்தி விட்டனர். அதுவும் ஆதார் கார்டு  உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்தால் மட்டுமே தயாரித்து கொடுக்கின்றனர். தற்போது விறகு வெட்டுவதற்கான ஒரு அடி நீள அரிவாளை மட்டும் தயாரிக்கின்றனர். விவசாயத்துக்கு தேவையான கருவிகள் செய்யும் பட்டறை அதிகம் உள்ளது. இங்கு விவசாயத்திற்காக தேவைப்படும் மண்வெட்டி அருவா மற்றும் இரும்பிலான பொருட்கள் செய்யக்கூடிய பட்டறை அதிகம் உள்ளது.  கோயில்களுக்கு வேண்டுதல் வைத்து அதிக உயரத்தில் அருவாள்கள் செய்து நேற்றி கடன் செலுத்துபவர்கள் இங்கு உள்ள பட்டறையில் செய்து வாங்கி செலுத்துவார்கள்.






 

மேலும் ஆடி, புரட்டாசி, சித்திரை மாதங்களில் கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அரிவாள்களும் தயாரிக்கப்படுகின்றன.  இன்னும் சில நாட்களில் அழகர் கோயில் திருவிழா ஆரம்பிக்க இருப்பதால் அங்கு இருக்கும் 18ஆம் படி கருப்பு சுவாமிக்கு திண்டுக்கல் ராமநாதபுரம் போன்ற ஊர்களில் இருந்து 21 அடி 18 அடி அரிவாக்கள் செய்வதற்காக திருப்புவனத்தில் பணி நடந்து வருகிறது.



 

திருப்புவனத்தில் உள்ள பட்டறையில் அரிவாள் செய்யும் பணி நடந்து வருகிறது. அந்த பட்டறை உரிமையாளர் கூறும் போது..,’ நமது மாவட்டத்தில் மட்டுமல்லாது பல மாவட்டங்களில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அவர்கள் தேவைக்கான அளவில் செய்து கொடுக்கும்படி ஆர்டர் கொடுப்பார்கள் அதை அவர்கள் கேட்கும் நேரத்தில் சிறந்த முறையில் இன்று செய்து கொடுப்போம்” என்று கூறுகின்றனர்.