சென்னையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மகனை கல்லால் தாக்கிய சித்தாப்பாவை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
சென்னை அண்ணாநகர் பகுதியில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மார்டின் ஷேக் என்பவர் தனது சித்தப்பா பாபுஜி என்பவருடன் தங்கியுள்ளார். இவர்கள் இருவரும் கட்டிட வேலை செய்து வந்தனர். இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ள நிலையில் அடிக்கடி சேர்ந்து மது குடிப்பது வழக்கமாக இருந்துள்ளது. இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலையை முடித்த பின்னர் இருவரும் வழக்கம்போல ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர்.
திருவாரூர்: சுவரில் அடித்துக்கொன்று பாத்திரத்தில் பதுக்கப்பட்ட குழந்தை! கொடூரம் செய்த தாய், பாட்டி!
அப்போது அவர்களிடையே வார்தைகள் தடித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு கட்டத்தில் கைக்கலப்பாக மாறி சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த பாபுஜி அருகில் கிடந்த கல்லை எடுத்து ஷேக் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி சரிந்துள்ளார். இதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். இதனால் பயந்து போன பாபுஜி அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
மதுரை : புகார் கொடுக்க வந்தபோது பழக்கம்.. பெண்ணுக்கு பாலியல்தொல்லை.. இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய ஷேக்கை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நேற்று முன்தினம் இரவு மார்டின் ஷேக் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த அண்ணாநகர் போலீசார் ஷேக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு பாபுஜியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையில் அண்ணாநகர் பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களிடம் மார்டின் ஷேக் மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டதால் இறந்ததாக முதலில் கூறியுள்ளார்.
ஆனால் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் மார்டின் ஷேக்கை அடித்து கொலை செய்ததை பாபுஜி ஒப்புக்கொண்டார். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மதுபோதையில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்