செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் இடத்திலே , எக்ஸ்போ வைக்கப்பட்டு உள்ளது. அதில் தமிழ் நாடு சுற்றுலாத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அரங்கில் விஆர் எக்ஸ்போ மற்றும் மேஜிக் புக் ஆகியவை பார்வையாளர்களை கவரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா சார்ந்த புகைப்படங்கள் வீடியோக்களை நேரடியாக,  கண்டு கொள்ளும் அனுபவத்தை கொடுக்கும் வகையில் VR தயார் செய்யப்பட்டுள்ளது.



 

 

இதே போல பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செஸ் போர்டுகள் விற்பனை செய்யும் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்ன சொல்லப்படும் தானாக விளையாடும் செஸ் போர்டு ஆகியவை எங்கே விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சுமார் இதன் மதிப்பு 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 45 ஆயிரம் ரூபாய் வரை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





 

தானாக விளையாடும் செஸ் போர்டு எதிரில் விளையாடுவதை பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். மக்களை கவரும் வண்ணம் இவை தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. இது மட்டும் இன்றி பாரம்பரிய முறையான செஸ் போர்டுகளும் வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பார்வையாளர்களைக் கவரும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

 



ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் செஸ் போர்டுகள் ஒவ்வொன்றும் சுமார் 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 45 ஆயிரம் ரூபாய் வரை உள்ளது. அதேபோல பாரம்பரிய முறைப்படி உள்ள செஸ் போர்டுகள் ஒவ்வொன்றின் நிலையும் அதன் கலைநயத்திற்கு, ஏற்ப சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரை உள்ளது. இது போக டேபிள் வடிவில் உள்ள செஸ் போர்டுகள், ஆகியவை குழந்தைகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 



 

செஸ்  போட்டிகள் இன்று நடைபெறுகிறது

 

மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று மதியம் 2 மணியிலிருந்து இரவு 8 மணி அளவில் வரை போட்டிகள் நடைபெற உள்ளது . மகாபலிபுரம் பூஞ்சேரி வரை வீரர்கள் தங்கி இருக்கும் ஓட்டல்களில் இருந்து வந்து செல்வதற்கு என ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதே போல காவலர்களும் நான்காயத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளனர். சர்வதேச அளவில் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.