புதுச்சேரி அரியாங்குப்பம் ஆர்.கே நகர் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர்கள் தினேஷ் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் தமிழக அரசின் சுகாதாரத்துறையில் மருத்துவ பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். கொரோனா காலத்தில் பணியாளர்களை அழைத்துச் செல்ல வாடகைக்கு கார்கள் தேவைப்படுவதாகக் கூறி கார் உரிமையாளர்கள் பலரை தொடர்பு கொண்டு மாத வாடகைக்கு கார்களை எடுத்து பயன்படுத்தி வந்துள்ளனர்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


சிறப்பு டிஜிபி மீது பெண் ஐபிஎஸ் அளித்திருந்த பாலியல் புகார்... வரும் 9ஆம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு



 


கடந்த டிசம்பர் மற்றும் ஜூலை மாதங்களில் கார் உரிமையாளர்களான கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்த உத்தரலிங்கம், நெல்லித்தோப்பைச் சேர்ந்த ஜெயபால், திருவாண்டார்கோயிலைச் சேர்ந்த சிவபெருமாள் ஆகியோரிடம் கார்களை வாடகைக்கு எடுத்த நிலையில் முதல் ஒரு மாதம் மட்டும் காருக்கான வாடகையை தினேஷும் ரமேஷும் சரியாக செலுத்தி வந்துள்ளனர். அதன்பிறகு வாடகை கார்களுக்கு வாடகை தராமல்  தங்களது தொடர்பை துண்டித்தனர்.



 


இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு, அரியாங்குப்பம், கிருமாம்பாக்கம் ஆகிய காவல் நிலையங்களில் காவல்துறையினர் மோசடி வழக்குப் பதிவு செய்து தினேஷையும் ரமேஷையும் தேடி வந்தனர். இந்நிலையில் தினேஷ் கடலூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக கிருமாம்பாக்கம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தேடி வந்தனர்.



 


உடனே இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான தனிப்படை போலீஸார் கடலூர் பேருந்து நிலையத்தில் தினேஷை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வாடகைக்கு எடுத்த கார்களை வேறு நபர்களிடம் ஏமாற்றி விற்றது தெரியவந்தது.


தினேஷ், ரமேஷ் ஆகிய இருவரும் மேட்டுப்பாளையம் கனரக வாகன முனையம் மற்றும் அங்குள்ள தொழிற்பேட்டை பகுதிகளில் பதுக்கி வைத்திருந்த 45 லட்சம் மதிப்பிலான 6 கார்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தினேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருக்கும் மற்றொரு குற்றவாளி ரமேஷை போலீசார் தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகளை படிக்க : 


சென்னை பெசன்ட் நகரில் குளிர்பானம் வாங்கி குடித்த சிறுமி உயிரிழப்பு...!


விழுப்புரம் அருகே ஊரடங்கை மீறி நடந்த மீன்பிடி திருவிழா...!- போலீஸ் வந்ததால் சிதறி ஓடிய கிராம மக்கள்