பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன் தற்போது பிஸியாக சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில்  கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் நடைப்பெற்று வருகிறது.   ‘ஆனந்தம் விளையாடும் வீடு’  படத்தில் வீடு என்பது கதையின் முக்கிய கருவாக உள்ளது. இன்று திண்டுக்கல்லில் படத்திற்கான வீடு கட்டும் காட்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை  சேரன் பார்வையிடுவது போன்ற காட்சிகளை படமாக்கி வந்துள்ளனர். இந்நிலையில் கால் இடறி சேரன் நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனால் தலையில் இரத்த காயம் ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேரன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தலையில் எட்டு தையல் போடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது சேரன் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.




படப்பிடிப்பு தளத்தில் காயம் ஏற்பட்டும் , தன்னால் படப்பிடிப்பு நின்றுவிட கூடாது என சேரன் மீதமுள்ள காட்சிகளையும் நடித்து கொடுத்தாக கூறுகின்றனர்.  தற்போது ஆனந்தம் விளையாடும் வீட்டின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில் , படக்குழுவினர் வீடு திரும்பியுள்ளனர். அடுத்ததாக படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளில் படக்குழு இறங்க உள்ளனர்.  படத்தில் சிங்கம் புலி, சரவணன், சினேகன், விக்னேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். நடித்துள்ளன 50 வயதாகும் சேரன் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனர். இவர் இயக்கத்தில் கடந்த 2000 ஆண்டு வெளியான ‘வெற்றிக்கொடிக்கட்டு’,  2004 ஆம் ஆண்டு வெளியான ஆட்டோகிராஃப் , 2005 ஆம் ஆண்டு வெளியான தவமாய் தவமிருந்து உள்ளிட்ட திரைப்படங்களுக்கு தேசிய விருதினை வாங்கியவர். இதில் தவமாய் தவமிருந்து படத்தில் கதநாயகனாகவும் நடித்திருந்தார். மேலும் இவர் இயக்கத்தில் வெளியான பாண்டவர் பூமி, யுத்தம் செய் , ராமன் தேடிய சீதை உள்ளிட்ட திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுத்தந்தது. 




விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட  இயக்குநர் சேரன். மக்களிடம் நன் மதிப்பையும் பெற்றார். பிக்பாஸ் வீட்டில் இருக்க வேண்டிய 100 போட்டி நாட்களில் , சேரன் 90 நாட்களை கடந்தவர். சேரன் மீது , மீரா மிதுன் கூறிய அவதூறான கருத்துக்களுக்கு கண்கலங்கிய சேரனுக்கு ஆதரவாக ‘சேரன் ஆர்மி ‘ என ஒரு அமைப்பை தொடங்கி அவரது ரசிகர்கள் குரல் கொடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருமணம்’ படத்துக்குப் பிறகு நடிகர் சேரன் நடித்த படம் ‘ராஜாவுக்கு செக்’. எமோஷனல் திரில்லராக உருவான இந்தப் படத்தை ஜெயம் ரவியின் 'மழை' பட இயக்குநர் சாய் ராஜ்குமார் இயக்கியுள்ளார். சென்ற ஆண்டு ஜனவரி மாதம் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது