மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயதான பிரபாவதி. இவரும் அதே கிராமத்தை சேர்ந்த நடராஜ் என்பவரின் மகன் 26 வயதான ஆனந்தராஜும்  கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபாவதி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரை அவரது பெற்றோர் மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டியுள்ளனர். அப்போது பிரபாவதியை பரிசோதித்த மருத்துவர் அவர் கருவுற்று இருப்பதாக தெரிவித்துள்ளார்.




இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இது குறித்து ஆனந்தராஜியிடம் கூறி திருமணம் தொடர்பாக ஆனந்தராஜின் அண்ணன்கள் அலெக்ஸாண்டர், அர்ஜுனன்,மற்றும் அர்ஜுனன் மனைவி ரஞ்சனி ஆகியோரிடம் பிரபாவதி திருமணம் செய்து வைக்க கூறியதாகவும், அதற்கு அவர்கள் ஒத்துக் கொள்ளாமல், திருமணம் செய்து  வைக்க முடியாது என மூன்று பேர் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரபாவதி தனது இறப்புக்கு தனது காதலன் ஆனந்தராஜ், காதலனின் அண்ணன் அலெக்ஸாண்டர், அர்ஜுனன் மற்றும் அர்ஜுனன் மனைவி ரஞ்சனி ஆகிய மூன்று பேர்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 


World Homeopathy Day 2023: இன்று உலக ஹோமியோபதி தினம்.. வரலாறு, முக்கியத்துவம் என்ன தெரியுமா?




இதுகுறித்து தகவல் அறிந்த திருவெண்காடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரபாவதியின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, காதலன் ஆனந்தராஜ், அவரது அண்ணன் அலெக்சாண்டர், மற்றோரு அண்ணன் அர்ஜுனின்  மனைவி ரஞ்சனி ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவான  அர்ஜுனை தேடி வருகின்றனர். இளம்பெண் தற்கொலை செய்து கொண்டு அதற்கு காரணமானவர்கள் என கடிதம் எழுதி வைத்த சம்பாவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Resolution Against TNGovernor: ’ராஜ்பவனை “அரசியல் பவனாக" மாற்றுகிறார் ஆளுநர்.. சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேச்சு.. ஹைலைட்ஸ்..




மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)


TN Corona Spike: வீரியம் குறைவு.. தமிழ்நாட்டில் க்ளஸ்டர் பாதிப்புகள் இல்லை.. கொரோனா பரவல் குறித்து அமைச்சர் மா.சு விளக்கம்..




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண