காரைக்காலில் ஜவுளிகடைகளில் துணிகளை திருடிய இரண்டு பெண்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் பாரதியார் சாலையில் பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் இரு பெண்கள் ஜவுளிக்கடையில் துணி வாங்குவது போல் நடித்துள்ளனர். அப்போது பணிபுரிந்த ஊழியர்களிடம் வெகுநேரம் துணி வாங்காமல் ஏமாற்றி வந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அவர்களை கண்காணிக்க தொடங்கினார்.
அப்போது இரு பெண்களும் சுடிதார் பண்டல்களை எடுத்து ஆடைக்குள் மறைத்து செல்ல முயன்றுள்ளனர். இதனையடுத்து கடை ஊழியர்கள் அவர்களை கையும் களவுமாக பிடித்து காரைக்கால் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த குறிஞ்சிப்பாடி பகுதியில் வசித்து வரும் மலர் (40) மற்றும் உஷா (50) ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து இவர்களை கைது செய்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் விசாரணையில் இவர்கள் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வழக்கு நிலுவையில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் படிக்க : அக்கா உடன் தகாத உறவு... திமுக பிரமுகரை ‛பீஸ்’ போட்ட தம்பி... துண்டாக்கப்பட்ட உடல் பாகங்கள் பறிமுதல்!
மேலும் படிக்க : ‛பார்த்து பார்த்து... மேஜை நாற்காலிக்கு வியர்க்க போகுது...’ ஆல் பேன்,லைட் ஆன்... வேறு எங்கே.. அரசு அலுவலகம் தான்!
மேலும் படிக்க : Free bicycle: பள்ளி, ஐடிஐ மாணவர்களுக்கு இலவச சைக்கிள் எப்போது?- தமிழக அரசு கொடுத்த அசத்தல் அப்டேட்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்