தனது முன்னாள் கணவரால் உயிருடன் புதைக்கப்பட்ட பெண் ஒருவர், புதைகுழியில் இருந்து சாமர்த்தியமான முறையில் தப்பிப் பிழைத்துள்ளார்.
வாஷிங்டன் மாநகரில் 53 வயதான சே க்யோங் அன் ( Chae Kyong An), அவரது முன்னாள் மனைவி யுங் சுக்கை கொடூரமாகத் தாக்கி, கத்தியால் குத்தி உயிருடன் புதைத்துள்ளார். யுங் சுக் புதைத்த பின் கைகளில் கட்டியிருந்த கட்டை சாமர்த்தியமாக அவிழ்த்த யங் சுக், புதை குழியிலிருந்து தப்பித்து அருகில் உள்ள இடத்திற்கு சுமார் 30 நிமிடம் நடந்து சென்று, அங்கு இருந்த சிலரின் உதவியால் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
பின் அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இந்த சம்பவம் திங்கள்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் வாஷிங்டன், தர்ஸ்டன் கவுண்டி என்ற இடத்தில் நடைபெற்றது.
காவல் துறை அதிகாரியிடம் யுங் சுக் கூறும்போது, "என் கணவர் என்னைக் கொல்ல முயற்சிக்கிறார்" என கூறியுள்ளார். மேலும் நீதிமன்ற ஆவணங்களின்படி அவரது கழுத்து, கீழ் முகம் மற்றும் கணுக்கால்களில் டேப் (duct tape) கட்டிய நிலையில் இருந்தது என்றும்,அவரது கால்கள், கைகள் மற்றும் தலையில் காயங்கள் இருந்துள்ளன.
இதையடுத்து, சே கியோங் அன் மீது கொலை முயற்சி, கடத்தல் மற்றும் தாக்குதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். அவர் செவ்வாய்க்கிழமை கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டார், புதன்கிழமை தொடக்க விசாரணையின் போது ஜாமீன் வழங்க கூடாது என்ற வழக்கறிஞரின் கோரிக்கையை நீதிபதி அனுமதித்தார். பின்னர் போலீஸாருக்கு யுங் சுக் அளித்த நேர்காணலில், விவாகரத்துக்கான பணத்தைப் பற்றி தனது கணவருடன் விவாதிக்கும்போது, தனது வீட்டில் தாக்கப்பட்டதாக யுங் சுக் கூறினார். பேச்சுவார்த்தையின்போது கோபமடைந்த கணவர், தனது கைகளை டக்ட் டேப்பால் கட்டி கொடூரமாகத் தாக்கியதாகவும், பின் யுங் சுக் தனது ஆப்பிள் வாட்ச் மூலம் அவசர உதவிக்கு அழைக்க முயற்சித்த போது அந்த கைக்கடிகாரத்தை அன் சுக்குநூறாக உடைத்ததாகவும் கூறினார்.
அங்கிருந்து மனைவியை யாருமில்லாத காட்டுக்குள் அழைத்துச் சென்று கத்தியால் சரமாரியாகக் குத்தி, புதைகுழியில் தள்ளியுள்ளார். புதை குழுயில் விழிந்த யுங் சுக் கையில் கட்டப்பட்டிருந்த டேப்பை அவிழ்த்துத் தப்பி சென்றதாகவும் கூறினார். இவை அனைத்தும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் உள்ளன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் சே கியோன் அன்னை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆப்பிள் பெண்ணே நீ யாரோ ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ..பிரபலமான ஐஸ்கிரீம் வகைகள்!
Watch Video : ஈஃபிள் டவர் முன்னால் நின்று சொன்ன காதல்.. இது செம்ம ப்ரொபோசல் வீடியோ..