பிரான்ஸ் நகரம் பேஷன் நகரம். ஃபேஷன் நகரம் மட்டுமல்ல காதலர்களுக்கான நகரமும் கூட. அந்த நகரத்தில் ஒரு காதல் அரங்கேறியுள்ளது. ஷாருக்கான் பட பாடலைப் பாடி அந்த இளைஞர் ஒரு இளம் பெண்ணுக்கு புரோபோஸ் பண்ண அந்தக் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


அந்தப் பாடல் கொய் மில் கயா பாடல்.  குச் குச் ஹோத்தா ஹை KKHH, 1998ஆம் ஆண்டில் வெளியான காதலும் நகைச்சுவையும் நிறைந்த இந்தித் திரைப்படம். அக்டோபர் 16, 1998 அன்று வெளியிடப்பட்டது. இதனை கரண் ஜோஹர் எழுதி இயக்கினார். பாலிவுட் திரைகளில் பரவலாக புகழ்பெற்றிருந்த இணையர் ஷாருக்கானும், கஜோலும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.






இது அவர்கள் நான்காம் முறையாக இணைந்து நடித்த திரைப்படமாக அமைந்தது. மற்றொரு துணை கதாபாத்திரத்தில் ராணி முகர்ஜியும் சல்மான் கானும் நடித்தனர். சானா சாயீது இத்திரைப்படத்தில் அறிமுகமானார். இத் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே மிகவும் பிரபலமானது.


கரன் ஜோஹர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். வெற்றிக்காக காத்திருந்த யஷ்ராஜ் பிலிம்சிற்கும் நல்ல வாய்ப்புகளை எதிர்நோக்கியிருந்த ராணி முகர்ஜிக்கும் இது நல்ல முன்னேற்றத்தைத் தந்தது. நண்பர் ஆதித்யா சோப்ராவைப் போலவே, கரன் ஜோகரும் ஒரு காதல் கதையுடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.


இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கலைஞர்களுக்கான ஆடைகளை சிறப்பாக மனிஷா மல்ஹோத்ரா வடிவமைத்திருப்பார், மேலும் திரைப்படத்தின் ஒளிப்பதிவு பலத்த பாராட்டைப் பெற்றது. ஜோஹர் தனது முதல் படத்தில் சிறந்த இயக்குநராக பெயர் பெற்றார். இந்தத் திரைப்படம் ஷாருக்கானுடைய மிகவும் வெற்றிகரமான படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சானா சயீத் சிறுமி அஞ்சலியின் பாத்திரத்தில் மிகவும் நல்ல முறையில் நடித்திருப்பார். திரைப்படத்தின் கதையானது "மை பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் வெட்டிங்" எனும் ஆங்கில திரைப்படத்தை ஒட்டி தழுவப்பட்டிருக்கும். ஜாதின் லலித் மிகச் சிறந்த இசையை வழங்கியிருப்பார்.


அந்தப் படத்தில் இடம்பெற்ற கொய் மில் கயா பாடலுக்கு தான் அந்த இளைஞர் அழகாக ஆட்டம்போடுகிறார். அவரது நடனத்தையும் மேரி மீ என்று அவர் எழுதி வைத்ததையும் பார்த்து அந்தப் பெண் ஆச்சர்யத்தில் ஆழ்ந்து போகிறார். பின்னர் அந்தப் பெண்ணும் அவருடன் இணைந்து நடனமாடுகிறார்.