Crime :  பெங்களூருவை அடுத்து தற்போது டெல்லியில் ஒரு பிளாஸ்டிக் பையில் ஒரு பெண்ணின் மண்டை ஓடு, இடுப்பு பகுதி மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ரயில் நிலையம் அருகே ஒரு ட்ரம்மில் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது டெல்லியிலும் இதுபோன்று ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.


பிளாஸ்டிக் பையில் பெண் சடலம்


டெல்லியின் சராய் காலே கான் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே இன்று காலை துண்டாக்கப்பட்ட  உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. சடலத்தை அடையாளம் காண ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட சடலத்தை பெண்ணின் சடலமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.  ஆய்வு செய்த குழுவின்படி பெண்ணின் சடலம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 


மேலும், பேருந்து நிலையம் அருகே ஒரு பிளாஸ்டிக் பையில் மண்டை ஓடு, இடுப்பு, உள்ளங்கை கண்டெடுக்கப்பட்டுள்ளது. பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட பின்னர் பல துண்டுகளாக வெட்டப்பட்டு, அதனை பிளாஸ்டிக் பையில் போட்டு அப்புறப்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.  


அதிர்ந்த போலீசார்


உடல் உறுப்புகள் அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கியதை அடுத்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு கிடந்த பிளாஸ்டிக் பையை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதில் ஒரு பெண்ணின் மண்டை ஓடு, இடுப்பு பகுதிகள் மற்றும் உள்ளங்கை இருந்ததுள்ளது.


சம்பவம் நடத்த இடத்தில் தடவியல் குழு ஆய்வு செய்தனர். மேலும், பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனனர். இச்சம்பவம் டெல்லி மக்களிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


முன்னதாக, 


கடந்த டிசம்பர் 6ஆம் தேதியறு ஒரு ரயிலில் டிரம்முக்குள் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்படது. அதேபோல் ஜனவரி 4ஆம் தேதி பெங்களூருவின் யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் ஒரு ப்ளாட்ஃபாரத்தில் கேட்பாரற்றுக் கிடந்த டிரம்முக்குள் பல காயங்களுடன் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.


இந்த இரண்டு சம்பவங்களிலும் கொலையான பெண்களின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மூன்றாவதாக ஒரு டிரம்மில் சடலம் கண்டெடுக்கப்படவே இது சீரியல் கொலைகாரனின் கைவரிசையா என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனை தொடர்ந்து தற்போது டெல்லியில் இதுபோன்று நடந்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க


Crime: கிருஷ்ணகிரியில் கொள்ளையடித்து கோவாவிற்கு டூர் சென்ற திருடன் - தேடிச்சென்று கைது செய்த போலீஸ்..!