Crime : கிருஷ்ணகிரியில் உள்ள வீட்டில்  நகைகளை கொள்ளையடித்து கோவாவுக்கு சுற்றுலா சென்ற திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.


50 சவரன் கொள்ளை


கிருஷ்ணகிரி பாலாஜி நகரைச் சேர்ந்தவர் மோகன். இவரது வெளியூர் சென்றிருந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் அவரது வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து 50 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.  வெளியூர் சென்றிருந்த மோகன் வீட்டிற்கு வந்தபோது, நகைளை கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி கடந்த 15ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கொள்ளை நடந்த இடத்தின் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.


கோவாவிற்கு விரைந்த தனிப்படை


அதில், கிருஷ்ணகிரி மாவட்டம் தண்டேகுப்பத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (25) என்பது தெரியவந்தது. இதுமட்டுமின்றி, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றது தெரிந்தது. கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இவர் இதுபோன்று நகைகளை திருடி, அதனை விற்று, சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டிருப்பதாகவும் தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.


உடனே தனிப்படை போலீசார் கொள்ளையனை பிடித்த கோவாவிற்கு விரைந்தனர்.  அங்கு தலைமறைவாக இருந்த கொள்ளையன் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த கிருஷ்ணகிரி காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் அவர் சில உண்மைகளை ஒப்புக்கொண்டுள்ளார்.


விசாரணையில் அம்பலம்


இதனையடுத்து, விசாரணையில் கூறியதாவது, கிருஷ்ணகிரி அருகே பெரியமோட்டூரில் சிவக்குமார் என்பரின் வீட்டில் 17 சவரன் தங்க நகைகளும், பழையபேட்டை  செல்வராஜ் பகுதியில் உள்ள அம்மு என்பவரது வீட்டில் 5 சவரன் நகைகளும், காவேரிப்பட்டிணம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள தனலட்சுமி என்பவரின் வீட்டில் 7 சவரன் நகைகளும் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.


இதுமட்டுமின்றி, கொள்ளையடித்த அனைத்து நகைகளையும் தனது நண்பரின் வீட்டில் மறைத்து வைத்திருப்பதையும் ஒப்புக்கொண்டார். இதனால் அவரது நண்பர்களான வைப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விக்கி, விமல் ஆகியோரின் போலீசார் சோதனை செய்து மறைத்து வைத்திருந்த 80 சவரன் நகைகளை  பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து, சதீஷ்குமாரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு வீடுகளில் நகைகள் திருட்டுபோன சம்பவம் மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது. 




மேலும் படிக்க


Crime : கோவையில் பாலத்தில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற ரவுடி : காயமடைந்த நிலையில் மருந்துமனையில் அனுமதி


Crime: பெண்ணின் இதயத்தை வெட்டி சமைத்த கொடூரம்...குடும்பத்தினருக்குக் கொடுத்து அவர்களையும் கொன்ற பயங்கரம்..!