கணவர் இறந்ததாக நினைத்து, பணம் மற்றும் நகைகளுடன் மனைவி தப்பிச் சென்ற சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளது.


ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் கணவரைக் கொல்ல முயன்றதாகவும், பணம், நகைகள் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு ஓடியதற்காகவும் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.


கடந்த ஜனவரி 18 ஆம் தேதி இரவில் ஃபரிதாபாத்தில் ஒரு பெண் தனது கணவரைக் கொன்றுவிட்டு பணம், நகைகள் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களுடன் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அந்தப்பெண், கணவர் சாப்பிட்ட உணவில் மயக்க மருந்து கலந்து, போர்வையால் அவரது வாயை மூடி அவரை அடித்துள்ளார்.


மேலும் படிக்க: Video | கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. இளம்பெண்ணின் முடியை மழித்து ரோட்டில் இழுத்துச்சென்ற மக்கள் : அதிர்ச்சி வீடியோ..


மயக்க நிலையில் இருந்தபோது, ​​அந்த பெண், இரண்டு ஆண்களுடன் சேர்ந்து பாதிக்கப்பட்டவரை சுமார் 20 நிமிடங்கள் தாக்கியுள்ளார். அவர் இறந்துவிட்டதாக தவறாக நினைத்து, அவர்கள் பணம், நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைக் கொண்டு தப்பியோடிவிட்டனர். ஆனால், அந்த நபர் இறக்காமல் மயக்க நிலையில் இருந்துள்ளார். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக அவர் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.




இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், “சம்பவம்  நடைபெற்ற இரவு உணவிற்கு முன்பு தம்பதியினர் தகராறில் ஈடுபட்டதை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. 45 வயதான பாதிக்கப்பட்ட நபர் தனது மனைவியுடன் அடிக்கடி சண்டையிடுவார். ஒருநாள் அவர்  தனது மனைவியின் தவறான உறவைப் பற்றி கண்டுபிடித்துள்ளார். கள்ளக்காதலன்  தனது கடனை அடைப்பதற்காக விரைவாக பணம் சம்பாதிக்குமாறு அந்த பெண்ணுக்கு அனுப்பிய மெஸேஜ்களை பார்த்ததாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க: Chhattisgarh Priest Attack: மதச்சடங்கு குறித்து கேள்வி: மொத்த குடும்பத்தையும் சரமாரியாக கத்தியால் குத்திய சாமியார்!


இதனை அறிந்துகொண்ட மனைவி அன்றிரவு இரவு 10 மணியளவில் தனது கணவருக்கு இரவு உணவை வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு மயக்கம் ஏற்பட்டு உறங்கியுள்ளார். மறுநாள் காலை எழுந்தபோது, ​​அவரது உடலில் பல காயங்கள் இருந்தன. தனது வீடு சூறையாடப்பட்டுள்ளதாகவும், பணம், நகைகள் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போயுள்ளது. பாதிக்கப்பட்டவர் தனது மனைவியைக் கண்டுபிடிக்க முயன்றார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களை விரைவில் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண