சத்தீஸ்கர் மாநிலத்தில் தான் செய்த மதச்சடங்குகள் குறித்து கேள்வி எழுப்பியதால் சாமியார் ஒருவர் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் வசித்து வருபவர் விஷ்ணு சாஹூ. இவரது மனைவி நிர்மலா. இவர்களுக்கு 19 வயதில் ஒரு மகளும், 18 வயதில் ஜித்திஷ் என்ற மகனும் உள்ளனர். இதில் ஜித்திஷ்ஷூக்கு மனநலபிரச்னைகள் இருந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து விஷ்ணு சாஹூ தனது மகன் நலம்பெற வேண்டி, தினுஷர்மா என்ற சாமியாரை வீட்டிற்கு வரவழைத்து பூஜைகள் செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளார்.




இதனையடுத்து நேற்று மதிய வேளையில் விஷ்ணுவின் வீட்டிற்கு வந்த தினு சாமியார் சிவ பூஜைகளை மேற்கொண்டுள்ளார் . பூஜைகள் முடிந்த உடன் விஷ்ணு அது குறித்தான தனது விமர்சனங்களை சாமியாரிடம் முன்வைத்துள்ளார். இது சாமியாரை கோபத்திற்கு உள்ளாக்கியது. அதன் பின்னர் சாமியார் அங்கிருந்து சென்றுவிட்டார். ஆனால் சாமியாருக்கு விஷ்ணு விமர்சித்தது கோபத்தை அதிகப்படுத்தியதாக தெரிகிறது.




இதனையடுத்து, மாலை 4 மணிக்கு பிரசாதம் கொடுப்பதாக கூறி விஷ்ணுவின் வீட்டிற்கு வந்த சாமியார், விஷ்ணு அவரது மனைவி மற்றும் பிள்ளைகளை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மருத்துமனைக்கு அழைத்து சென்றனர். சம்பவத்தில் ஈடுபட்ட சாமியாரை பிடித்து, காவலர்களிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் கொலை முயற்சி செய்தமைக்காக சட்டப்பிரிவு 307  கீழ்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாமியார் ஒருவரால் ஒரு குடும்பம் தாக்கப்பட்ட சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண