விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அருகே வீரங்கிபுரத்தில் அய்யனார் கோயிலில் வெள்ளை வேட்டி சட்டை அணிந்த நபர் உண்டியலை அரிவாளாலால் உடைத்து ரூ.1 லட்சம் அளவிலான பணத்தை கொள்ளையடித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 


விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகேயுள்ள  வீரங்கிபுரம் கிராமத்தில் அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் அதே ஊரை சேர்ந்த நாராயணசாமி என்பவர் தர்மகர்த்தாவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் இரவு தர்மகர்த்தா கதவை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டு காலை வந்து கோயிலை திறந்தது பார்த்தப்போது கோயில் உண்டியலில் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியலில் இருந்த  ரூ.1 லட்சம்  அளவிலான பணம் கொள்ளை போனது தெரியவந்தது.  


இதனையடுத்து, தர்மகாத்தா கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரனை மேற்கொண்டு கோவிலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.  அப்போது கோயிலில் வெள்ளை வேட்டி சட்டை அணிந்த நபர் ஒருவர் கோயில் உள்ளே இருந்த கத்தியை எடுத்து வந்து உண்டியலின் பூண்டினை உடைத்து ஒரு லட்சம் அளவிலான பணத்தை கொள்ளையடித்து சென்றது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது. அந்த சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.


 


 




விழுப்புரம் மாவட்ட செய்திகள் : 


Differently Abled Scholarship: மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு


கிராமங்கள் வளர்ச்சி பெற கடுமையாக உழைப்பவர் தான் முதல்வர் ஸ்டாலின் - எம்எல்ஏ லட்சுமணன்


Crime: ஆவின் பால் பூத் வைப்பதில் தகராறு; விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற தி.மு.க. நிர்வாகி - பெரும் அதிர்ச்சி..!


துர்நாற்றத்தில் மூழ்கி இருக்கும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்


புதுச்சேரி, விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.