கஞ்சா போதையில் தனியார் பேருந்தை வழிமறித்து இளைஞர்கள் தாக்கிய சி.சி.டி.வி., காட்சிகள் உசிலம்பட்டி பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


காவல்துறை நடவடிக்கை


தென்மண்டலத்திற்கு உட்பட்ட மதுரை, தேனி என 10 மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை கஞ்சா கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்கு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். ஆனாலும் கஞ்சாவை முழுமையாக தடை செய்யமுடியாத நிலைதான் உள்ளது. இந்நிலையில் மதுரை, உசிலம்பட்டியில் கஞ்சா போதையில் தனியார் பேருந்தை வழிமறித்த இளைஞர்கள் நடத்துநர்களை சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கஞ்சா போதையில் தாக்குதல்


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதியான மதுரை ரோடு, விநாயகர் கோயில் அருகில் மதுரையிலிருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை, பேருந்தின் முன்பு ஆட்டோவில் வந்த இளைஞர்கள் வழிமறித்து வம்புக்கு இழுத்ததுடன், தட்டிக் கேட்ட தனியார் பேருந்து நடத்துநர்களை சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்திய போது அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இளைஞர்களிடமிருந்து நடத்துநர்களை காப்பாற்றி அனுப்பி வைத்த நிலையில், நடத்துநரை தாக்கிய இளைஞர்கள் கஞ்சா போதையில் இருந்தாகவும், குறுகலான சாலையில் வழிவிடாமல் வழிமறித்து ஆட்டோவை இயக்கி வந்த போது தட்டிக் கேட்ட நடத்துநரை தாக்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


 






இளைஞர்கள் தாக்கும் காட்சி வைரல்


மேலும் இந்த சம்பவம் குறித்து தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் தரப்பிலிருந்து காவல் நிலையத்தில் புகார் ஏதும் அளிக்காத சூழலில் வைரலான சி.சி.டி.வி., காட்சிகளின் அடிப்படையில் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா போதையில் தனியார் பேருந்தை வழிமறித்து இளைஞர்கள் தாக்கிய சி.சி.டி.வி., காட்சிகள் உசிலம்பட்டி பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஒரு பீடிக்காக இப்படியா செய்வது... கருகிய கொத்தனார்.. மதுரையில் பயங்கரம் - நடந்தது என்ன?


மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - savukku shankar case: போலீஸ் துன்புறுத்தினார்களா..? - நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் சொன்னது என்ன?