தூங்கும் இடத்திற்கு அடிக்கடி தகராறு வந்துள்ளது எனவும், பீடி குடித்தபோது அதனை கேட்டபோது ஆபாசமாக திட்டியதால் கொலை செய்துவிட்டதாகவும் முருகன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.


பீடி குடிப்பதில் தகராறு


மதுரை  ஆத்திகுளம் ஏஞ்சல்நகர் பகுதியை சேர்ந்த சர்க்கரை (65 வயது) என்ற நபர் கொத்தனார் வேலை பார்த்துவருகிறார். இவர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நாராயணபுரம் மந்தையம்மன் கோயில் அருகே ப்ளாட்பாரத்தில் உறங்கியுள்ளார். இவரின் அருகே நாராயணபுரம் பகுதியை சேர்ந்த முருகன் (43 வயது) என்பவர் உறங்கியுள்ளார். அப்போது சர்க்கரை பீடி குடித்தபோது  முருகனும் பீடி கேட்டுள்ளார். அப்பொது முருகனை சர்க்கரை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரமடைந்த முருகன் நள்ளிரவில் சர்க்கரை தூங்கிகொண்டிருந்த போது உடலில் பெட்ரோலை ஊற்றி கொலை செய்துள்ளார். இதனிடையே சம்பவ இடத்திற்கு ரோந்து பணிக்கு சென்ற தல்லாகுளம் காவல்துறையினரை பார்த்து தப்பியோடிய முருகனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


- TN Weather Update: வங்கக்கடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்றும் நாளையும் மிக கனமழை எச்சரிக்கை..


பெட்ரோல் ஊற்றி கொலை


முதற்கட்ட விசாரணையில் இருவருக்கும் இடையே கோயில் அருகே ப்ளாட்பாரத்தில் உறங்கும் போது தூங்கும் இடத்திற்கு அடிக்கடி தகராறு வந்துள்ளது எனவும் பீடி குடித்தபோது அதனை கேட்டபோது ஆபாசமாக திட்டியதால் கொலை செய்துவிட்டதாகவும் முருகன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். மதுரையில் ஒரு பீடிக்காக அருகில் படுத்து தூங்கியவரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - TN CM MK Stalin: வாக்குகளுக்காக மக்களை அவதூறு செய்வதா? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்..


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Lok Sabha Election 2024: ஒடிசாவில் பாஜக உடனான கூட்டணியை கலைத்த உள்ளூர் தலைவர்கள் - பிஜேடி தலைவர் வி.கே. பாண்டியன்