Electric Scooters Range: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிடைக்கும் அதிக ரேஞ்ச்/மைலேஜ் வழங்கக் கூடிய, டாப் 6 மின்சார ஸ்கூட்டர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


மின்சார ஸ்கூட்டர்கள்:


அதிகப்படியான எரிபொருள் விலை பிரச்னைக்கு மத்தியில், அரசின் பல்வேறு ஊக்குவிப்புகள் காரணமாக இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் உடன், புதுப்புது மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு நீங்களும் ஒரு புதிய மின்சார ஸ்கூட்டரை வாங்க விரும்பினால், மிக அதிக ரேஞ்ச்/ மைலேஜ் வழங்கக் கூடிய டாப் 6 மின்சார ஸ்கூட்டர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இது உங்களுக்கான சரியான வாகனத்த தேர்வு செய்ய உதவலாம்.


சிம்பிள் ஒன் - 212 கிமீ:


சிம்பிள் எனர்ஜிஸ் ஒன் இந்தியாவில் உள்ள மின்சார ஸ்கூட்டர்களில் மிக நீண்ட ரேஞ்ச் வழங்கக் கூடிய வாகனமாக அறியப்படுகிறது. இந்த வாகனத்தில் உள்ள பெரிய 4.8 kWh பேட்டரியை முழுமையாக ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 212 கிமீ வரை பயணிக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விலை ரூ. 1.65 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இது அதிகபட்சமாக மணிக்கு 105 கிமீ வேகத்தில் பயணிக்கும்.


ஒலா S1 Pro Gen 2 - 195 கிமீ:


ஓலா எஸ்1 ப்ரோ (2வது ஜெனரல்) ஒருமுறை சார்ஜ் செய்தால், இடைநிற்றல் இன்றி 195 கிமீ வரை பயணிக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது 8 வருட உத்தரவாதத்துடன் வரும் புதிய 4 kWh பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது. 1.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வாங்கலாம். இந்த வாகனத்தை அதிகபட்ச மணிக்கு 120 கிமீ வேகத்தில் செலுத்தலாம்.


ஹீரோ லைஃப் வி1 ப்ரோ - 165 கிமீ


ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா வி1 ப்ரோ ஒரு முறை சார்ஜ் செய்தால் 165 கிமீ வரை இடைநிற்றல் இன்றி பயணிக்கும். இது 3.94 kWh பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது மற்றும் அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடிய வல்லமை கொண்டுள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டருக்கான தொடக்க விலை ரூ.1.26 லட்சமாக உள்ளது


ஒகினாவா ஓகி-90 - 160 கிமீ:


ஒகினாவா Okhi-90 ஒருமுறை சார்ஜ் செய்தால் 160 கிமீ வரை பயணிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது 3.08 kWh பேட்டரியுடன் அதிகபட்சமாக மணிக்கு 74 கிமீ வேகத்தில் செல்லும். இது மற்ற ஸ்கூட்டர்களை விட சற்று விலை அதிகம். அதாவது இதன் வ்லை ரூ.1.86 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஒகாயா ஃபாஸ்ட் F4 - 160 கிமீ:


Faast F4 ஆனது ஒருமுறை சார்ஜ் செய்தால் 160 கிமீ வரை செல்லும். இது 4.4 kWh மொத்த திறன் கொண்ட இரட்டை பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது. மூன்று சவாரி மோட்களுடன் வரும் இந்த வாகனம், அதிகபட்சமாக மணிக்கு 70 கிமீ வேகத்தில் செல்லும். இதன் விலை எக்ஸ்-ஷோரூம் ரூ.1.20 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.


ஏதர் 450 அபெக்ஸ் - 157 கிமீ:


450 அபெக்ஸ் ஒருமுறை சார்ஜ் செய்தால் இடைநிற்றல் இன்ற் 157 கிமீ வரை செல்லும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது 3.7 kWh பேட்டரியுடன், அதிகபட்சமாக மணிக்கு 100கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.1.89 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. 


Car loan Information:

Calculate Car Loan EMI