பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது அரசு பள்ளி ஒன்றில் இரண்டு சிறுமிகளுக்கு எதிராக ஒரு பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


டெல்லியின் பஜன்பூர் பகுதியில் மாநகராட்சி சார்பில் அரசு பள்ளி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வரும் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால் காவல்துறைக்கு புகார் ஒன்றை அளித்துள்ளார். 






அதில், “பஜன்பூர் பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் 8-ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்றுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பள்ளிக்குள் வந்து அந்த இரண்டு சிறுமிகளின் ஆடைகளை கழைந்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளதாக தெரிகிறது. அத்துடன் அவர் பள்ளியின் வகுப்பறையில் சிறுநீர் கழித்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும்.


மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கிழக்கு மாநகராட்சி ஆணையர் எங்களிடம் நேரில் வந்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது பள்ளிக்குள் அடையாளம் தெரியாத நபர் எப்படி நுழைந்தார்? அங்கு சிசிடிவி கேமராக்கள் இடம்பெறவில்லையா? போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.அத்துடன் இந்த சம்பவத்தை மறைக்க முயன்ற பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.  இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த நபர் யார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.




மேலும் படிக்க:ஆட்டோவில் சென்ற பெண்ணை வெளியே இழுத்து பாலியல் குற்றம்.. வீடியோ வெளியிட்டு கொடூரம்..




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண