நம் உடலின் சருமத்திற்கும் முகத்தின் சருமத்திற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. அதற்கேற்றவாறுதான் நம் சரும பராமரிப்பும் இருக்க வேண்டும். ஃபேஸ் வாஷ் என்பதற்கெல்லாம் ஒரு நடைமுறை இருக்கிறதான் என்று கேட்டால், ஆம் என்பதுதான் பதில். முகம் கழுவ சுடு நீர் பயன்படுத்தக் கூடாது, முகத்தை அழுத்தி தேய்க்க கூடாது, முகத்தை மசாஸ் செய்வதுபோலதான் செய்ய வேண்டும் என இப்படி பலவற்றில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.


அப்படி, உங்களுக்கு பேஸ் வாஷ் செய்வது எப்படி என்று, வாணி ராணி, கல்யாண பரிசு போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சின்னத்திரை  நடிகை நிவேதிதா நமக்கு பல டிப்ஸ்களை வழங்குகிறார்.


நடிகை நிவேதிதா ஐபிசி மங்கை யூடியூப் சேனலில் தன்னுடைய லைஃப்ஸ்டைல் மற்றும் சரும பராமரிப்பு குறித்து பகிந்துகொண்ட டிப்ஸ்கள் பற்றி கீழே காணலாம்.


”நடிகைனாலே சருமம் பளபளப்பாக இருக்கணும்னு இருக்கு. ஆனால், சருமம் என்பது பல லேயர்களைக் கொண்டது. சரும பிரச்சனைகள் அதிகமாக வருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கு. சரும பராமரிப்பு என்பது, நாம் சருமத்தில் என்னெல்லாம் செய்றோம் என்பது பற்றி மட்டுமே இல்லை. நாம் எந்த மாதிரியான உணவுகள் சாப்பிடுகிறோம் என்பதும் அடங்கும்.


சருமம் வறண்டுவிடாம இருக்க, அதற்கு எப்போதும் ஹைட்ரேஷன் தேவை. நான் காலையில எழுந்ததும் ஒரு நாளில் நீங்க அதிகம் தண்ணீர் குடிப்பது நல்லது. ஒரு கிளாஸ் தண்ணீருடன் என் நாளை தொடங்குவேன்.  அதுக்கு பிறகுதான் முகம் கழுவுவேன். மைல்ட் கிளென்சர் ஃபேஸ் வாஷ் தான் யூஸ் பண்ணுவேன். அப்புறம் மாய்ஸ்சரைசர், சன்ஸ்கீரின் அப்ளை பண்ணுவேன்.


நைட் கேர் ரோட்டீன்ல், தூங்கப்போகும் முன்பு, நல்லா முகம் கழுவி,மாய்ஸ்சரைசர் அப்ளை செய்வேன். சீரம், நைட் கிரீம், இதோடு சேத்துப்பேன். கண்களுக்கு கீழே உள்ள சருமத்தைப் பாதுகாக்க அண்டர் ஐ கிரீம், காலையில, இரவு ரெண்டு நேரமும் யூஸ் பண்ணுவேன்.


என் சருமம் பாதுகாப்பாக இருக்குனா,அதற்கு முக்கிய காரணம் : நான் என் சருமத்தை பற்றி தெரிந்து கொண்டேன். பொதுவா நான் டெர்மடாலஜிஸ்ட் பரிந்துரைக்கிற ஸ்கின் கேர் பிரொடக்ட்ஸ்தான் பயன்படுத்துவேன்.


சருமத்தை பராமரிப்பதில், கற்றாழை உண்மையா ஒரு அதிசயமா பிரொடக்ட். அதோடு திறனை நான் உணர்ந்திருக்கேன். இது சருமம் டேன் ஆவதிலிருந்தும் பாதுகாக்கும். மாய்ஸ்சரைசிங் ரெண்டுக்குமே ரொம்ப நல்ல இருக்கும்.


ஹைப்பர் பிக்மெண்டேஷனுக்கும் மற்றும் உதடு ஆரோக்கியத்திற்கு பாலாடை நல்ல வேலை செய்யும்.


எனக்கு பியூட்டி பார்லர் செல்வதற்கெல்லாம் பொறுமை இல்லை. ஏன்னா ஒவ்வொரு நாளும் ஆள் மாறிட்டே இருப்பாங்க. புருவம் திருத்தம் பண்ணும்போது முகமே மாறிடுது. அதோட 50 ரூபாய்க்கு நம்மளே வீட்டுல பண்றது, பார்லருக்கு போனா 5000 ரூபாய் செலவாகும்.  அதனால நானே வீட்டுல வேக்ஸ் பண்ணிப்பேன். நானே புருவமும் திருத்தம் செய்துக்குவேன்” என்றார்.


முகப்பரு ஒரு யுனிவர்சல் பிரொபிளம். எல்லா வயதினருக்கும் முகப்பரு ஏற்படும். இது ஒரு லைஃப் ஸ்டைல் பிரச்சனை தான். நம்ம என்ன சாப்பிடுறோம், ஹார்மோன்ஸ், மேக்கப் எல்லாமே முகப்பரு ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும். முகப்பரு வராம நாம தடுக்க முடியாது. ஆனா தழும்பு வராம இருக்க என்னென்ன செய்ய முடியுமோ, அதை செய்யலாம். குறிப்பாக, நீங்க உங்க சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்குமாறு பார்த்துகொள்ளுங்கள்.


 


முகத்திற்கு மேக்கப் செய்தா, இரவு தூங்குவதற்கு முன்பு அதை நீக்கிவிட்டுதான் தூங்கனும். மேக்கப் ரிமூவ் செய்ய சோம்பல்பட கூடாது. மேக்கப்ப ரிமூவ் செய்யலைன்னா, உங்கள் முகத்தில் உள்ள துளைகள் அடைத்து கொண்டு முகப்பரு ஏற்படும். தேங்காய் எண்ணெய் இல்ல மேக்கப் ரீமுவர்லாம் யூஸ் பண்ணி, மேக்கப் எடுத்ததுக்கு  அப்புறமா ஃபேஸ் வாஷ் பண்ணனும்.  நைட் ஸ்கின் கேர்  எப்போது தவறாம செய்யனும்.


உங்கள் ஸ்கின் டைப் என்னன்னு தெரிஞ்சுக்கோங்க,  அதற்கேற்றவாறு பவுண்டேஷன் யூஸ் பண்ணனும். ஆயிலி ஸ்கின் இருக்கிறவங்க, கிரீமியா இருக்கிற பவுண்டேஷன் பயன்படுத்தினா பருக்கள் வரும். அதனால, உங்க சமருமத்தின் தன்மைக்கேற்றவாறு ஸ்கின் பிரொடக்ட்ஸ் பயன்படுத்துறது  நல்லது.


இப்போ, சந்தைகளில் பிம்பிள் பேட்ச் கிடைக்குது. அது நீங்க முகப்பரு மேல வச்சாலே போதும். அதுல வேம்பு, மஞ்சள் இருக்கு. அது உங்களுக்கு நல்ல பலன் கொடுக்கும். அது ஸ்கின் கலர்ல இருக்கும். அதனால நீங்க வச்சிருக்கிறது வெளியே தெரியாது. பிம்பிள் பேட்ச் உடன்நீங்க மேக்கப் கூட போடலாம்.


சரும பொலிவுக்கு விட்டமின் டி-யுன் அவசியம். அதனால், காலை மற்றும் மாலை வேளையில் சூரிய ஒளியில் சன் பாத் எடுப்பது நல்லது.


கரு வளையம் ஏற்படாம இருக்க, நல்ல தூக்கம் முக்கியம். சரியா தூங்காம எதுவுமே பண்ண முடியாது.


ஆரோக்கியமான சருமம் நீங்கள் வெளியே செய்யும் மெனக்கெடலைவிட, நீங்க என்ன உணவு சாப்பிடுறீங்க என்பது ரொம்பவே முக்கியம். அதனால, ஆரோக்கியமான உணவு சாப்பிடுங்க. எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் துரிக்த உணவுகளுக்கு நோ சொல்லிடுங்க.