விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பயிர் காப்பீட்டு திட்டத்தில் கிராம நிர்வாக அலுவலரின் கையெழுத்தை போலியாக பதிவு செய்து, காப்பீடு பதிவு செய்ய முயன்ற மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இரண்டு பேர் தலைமறைவாக உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையின் போது அதிக அளவிலான பயிர் சேதம் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் பெருமளவு பாதிப்படைந்தனர். இந்த நிலையில் மரக்காணம் அருகே உள்ள எம்.புதுப்பாக்கம் கிராமத்தில் வெள்ள நிவாரணத்திற்காக பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் கிராம நிர்வாக அலுவலரின் கையெழுத்தை போலியாக பதிவு செய்து கிராம நிர்வாக அலுவலரிடமே சமர்ப்பித்துள்ளனர்.


ஆர்டர் செய்தது சிக்கன் விங்ஸ்.. வந்தது தலை.. KFC-இல் நடந்த களேபரம்..



கிராம நிர்வாக அலுவலர் ஆவணங்களைப் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டார் அப்பொழுது அதிலிருந்த ஆவணங்கள் அனைத்திலும் கிராம நிர்வாக அலுவலர் கையெழுத்தை போலியாக பதிவு செய்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பிரபு மரக்காணம் காவல் துறையினருக்கு புகார் அளித்தார், புகாரின் அடிப்படையில் மரக்காணம் காவல் துறையினர் நேரடியாக எம் புதுப்பாக்கம் கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் விசாரணையில் பயிர் காப்பீட்டு திட்ட ஆவணத்தில் போலியாக கிராம நிர்வாக அலுவலரின் கையெழுத்தை பதிவு செய்ததை குற்றவாளிகள் ஒப்புக்கொண்டனர்.




பின்பு மரக்காணம் காவலர்கள் சம்பவ இடத்திலேயே போலியாக கையெழுத்தை பதிவு செய்த தண்டபாணி, ஐயனார் மற்றும் மஞ்சுளா ஆகிய மூன்று நபர்களையும் கைது செய்து மரக்காணம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த முருகன் மற்றும் அருண் ஆகியோர் தலைமறைவாகி உள்ள நிலையில் போலீசார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Meendum Manjapai: அதிமுக வெள்ளைப் பை... திமுக மஞ்சப் பை... எப்போ தான் நெகிழிக்கு Bye...Bye!



போலியான கையெழுத்திட்டு வெள்ள நிவாரண பயிர் காப்பீட்டு திட்டத்தை பதிவு செய்ய முயன்ற 3 பேரையும் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர். கிராம நிர்வாக அலுவலரின் கையெழுத்தை போலியாக பதிவு செய்து அவரிடமே அந்த ஆவணத்தை அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் வாசிக்க: Low Attendence : ஆர்.எஸ்.பாரதி-அன்புமணி இடையே கடும் போட்டி; முந்தினார் அதிமுக எம்பி... ராஜ்யசபாவில் ‛கட்’ அடித்த லிஸ்ட்!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண