செஞ்சி அருகே வீட்டை சூறையாடிய வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சே.பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலையின் மகன் வீரமுத்து (27). வீரமுத்து மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். இவர் எதிர் வீட்டில் வசிக்கும் சுந்தரம் (60) குடும்பத்தினர் நேற்று இரவு விவசாய நிலத்திற்கு சென்றுள்ளனர். விவசாய வேலை அதிகமாக இருந்த காரணத்தினால் விவசாய நிலையத்திலேயே சுந்தரம் குடும்பத்தினர் தங்கிவிட்டனர்.


History of Ford India : கணக்குப் பார்த்த இந்தியர்கள்.. கடையை சாத்திய ஃபோர்ட் | Ford Tamilnadu




 




இந்த நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் வீரமுத்து சுந்திரத்தின் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் தடியால் அடித்து நொறுக்கி உள்ள மேலும் தீயிட்டு கொளுத்தி உள்ளார். இதற்கிடையே அதிகாலையில் சுந்தரம் குடும்பத்தினர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த பொழுது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் உடைந்த நிலையில் கிடந்துள்ளது, மேலும் வீட்டில் ஒரு பகுதியில் தீ வைத்து எரிக்கப்பட்டது கண்டு சுந்தரம் அதிர்ச்சியடைந்தார்.



History Of Hyundai : 25ம் ஆண்டில் ஹூண்டாய்.. இந்தியாவில் நம்பர் 2.. எப்படி நடந்தது இந்த மேஜிக்..?


இதனால் ஆத்திரமடைந்த சுந்தரம் குடும்பத்தினர் வீரமுத்துவை  கல் மற்றும் தடியால் அடித்து உள்ளனர். சுந்தரம் குடும்பத்தினர் அடித்ததில் வீரமுத்து சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்துள்ளார். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த செஞ்சி துணை காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் மற்றும் சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் தங்க குருநாதன், நல்லான்பிள்ளை பெற்றான் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஜெயராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.



 


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த நிலையில் கிடந்த வீரமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.


 




மேலும் இது குறித்து வீரமுத்துவின் தந்தை அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில் நல்லான்பிள்ளை பெற்றான் போலீசார் வீரமுத்து கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை வழக்குப்பதிவு செய்து சுந்தரத்தின் மகன்கள் விஜயகுமார் (35) ராஜேந்திரன் (28) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய சுந்தரத்தின் மனைவி ரத்தினம் தலைமறைவான நிலையில் போலீசார் தேடி வருகின்றனர்.


Abp Explainer: சட்டசபை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்படாதது ஏன் தெரியுமா?


Seeman Speech : திமுகவில் இருந்திருந்தால் அமைச்சர் ஆகியிருப்பேன் - சீமான்