விழுப்புரம்: மரக்காணம் அருகே நகர் கிராமத்தில் கள்ளக்காதலியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த பிரம்மதேசம் அருகே உள்ள நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் முருகன்(29). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த விசாலாட்சி (38), என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில் விசாலாட்சி கள்ளத்தொடர்பை சமீபத்தில் நிறுத்தியதாக தெரிகிறது. இதனால் கடந்த 19-ஆம் தேதி இரவு முருகன் விசாலாட்சியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டி, நகர் கிராமம் ஆலமரம் அருகே குப்பை கொட்டும் இடத்திற்கு வரவழைத்துள்ளார். 


அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு முருகன் மண்ணெண்ணையை விசாலாட்சி மீது ஊற்றி தீ வைத்து, கொளுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விசாலாட்சியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 




விழுப்புரம் மாவட்ட செய்திகள் : 


Veera Muthuvel Father: சந்திராயன் 3க்கு பெருமை சேர்த்த விழுப்புரம் வீர முத்துவேல்.. ஆனந்த கண்ணீரில் தந்தை நெகிழ்ச்சி..!


Villupuram: பேக்கரி கடையில் சாப்பிட்ட கேக்கில் பல்செட்... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்..!


செம்மண் குவாரி வழக்கு: நேரில் ஆஜரான அமைச்சர் பொன்முடி; 29ம் தேதி ஒத்திவைத்த நீதிபதி


வாடிக்கையாளரிடம் முன்பணம் பெற்று ரூ. 27 லட்சம் மோசடி; விழுப்புரத்தில் கார் நிறுவன மேலாளர் கைது


புதுச்சேரி, விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.