புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் சுபநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களில் நிகழ்ச்சிகளை, மொத்தமாக கான்ட்ராக்ட் எடுத்து வேலைகளை முடித்துக் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வேலைக்கு வரும் பெண்களை தவறான வழிக்கு அழைத்தாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
இங்கு சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
இந்நிலையில் திருமண நிகழ்ச்சியில் வரவேற்பு செய்யும், பணியில் பங்கேற்றும் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறியதாக சொல்லப்படுகிறது. இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமரவாதிபுதூர் பகுதிக்கு அழைத்து சரமாரியாக அடித்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவியது. இதனிடையே ராஜா சாக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தன்னை தாக்கி சிலர் பணத்தை பறித்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். ராஜாவுக்கு காரைக்குடியை சேர்ந்த காவலர் ஒருவர் உதவி செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து சிவகங்கை மாவட்ட காவல்துறை எஸ்.பி, காரைக்குடி டி.எஸ்.யை விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார். இது குறித்த விசாரணை நடைபெற்றுவருகிறது.
சிவகங்கை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivagangai Sivaraman: 'கலப்படம் இல்லாத பாரம்பரிய நெல்’ நம்மாழ்வார் வழியில் சிவகங்கை விவசாயி !
மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரில், "ராஜா ஆதரவற்ற பெண்களை குறித்து வைத்து அவர்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி தவறான வழிக்கு அழைத்து செல்கிறார். அவர் சொல்வதை கேட்காத பெண்களை கடுமையாக தாக்கி அவர் வழிக்கு வரவைக்கிறார். பல்வேறு இளம் பெண்களின் வாழ்க்கையில் ராஜா விளையாடி இருக்கிறார். அவரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த காவலர் மாயவதன் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என கூறியுள்ளனர்.
பொள்ளாச்சி பகுதியில் நடந்த சம்பவம் போன்று மற்றொரு சம்பம் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!