மயிலாடுதுறை அருகே தரமற்ற தார்சாலை போடப்பட்டுள்ளதாக வீடியோ பதிவிட்டவர்களிடம், மிரட்டல் விடுத்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக மற்ற கட்சியினரை காட்டிலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்களின் அடிப்படை தேவை குறித்து குரல் கொடுப்பதும், பிரச்சினை சார்ந்து பல்வேறு வகையான போராட்டங்களையும் முன்னெடுப்பதில் அதிகம் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். இதனால் அவர்களுக்கு கொலைமிரட்டல் ,தாக்குதலுக்கு ஆளாகுதல் உள்ளிட்ட பல விதமான இடையூறு ஏற்பட்டாலும் அதனை அவர்கள் பொருட்படுத்துவதில்லை.


Actor Vishal: மோடியா, ராகுல் காந்தியா.. 2024 தேர்தலில் வெற்றி யாருக்கு? விஷால் கணிப்பு இதுதான்!




தரமற்ற சாலை:


தற்போது அதுபோன்ற ஒரு சம்பவம் தான் மயிலாடுதுறையில் நடைபெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மாப்படுகை ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் கடந்த 8 -ம் தேதி பண்ணையார் தெரு பகுதியில் புதிதாக ஊராட்சி சார்பில் தார் சாலை போடப்பட்டுள்ளது.


இந்நிலையில் அந்த தார் சாலை மிகவும் தரமற்று மூன்று மாதங்கள் கூட தாங்காத அளவிற்கு போடப்பட்டுள்ளதாக கூறி, அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் மேகநாதன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கணேசன் ஆகியோர் சாலையினை வீடியோ பதிவு செய்து, அந்த சாலையின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.


போதைப்பொருள், லாட்டரி சீட் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை - திருச்சி காவல் ஆணையர் எச்சரிக்கை


 



ஊராட்சி மன்ற தலைவர் மிரட்டல்:


மேலும் தரமற்ற முறையில் சாலை போடப்பட்டதை கண்டித்து தார்சாலையை கூட்டி அள்ளி தலையில் சுமந்து செல்லும் போராட்டம் வருகின்ற பிப்ரவரி 21 -ம் தேதி அறிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாப்படுகை ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழியின் கணவர் ஜெயக்குமார் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சிவக்குமார் ஆகிய இருவரும் அப்பகுதியில் சென்ற மேகநாதன் மற்றும் கணேசனிடம் நீங்கள் எப்படி வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டீர்கள்? இது குறித்து என்னிடம்தான் பேசியிருக்க வேண்டும். கம்யூனிஸ்ட் காரர்கள் என்றால் என்ன மகாத்மா காந்தியா? நீ, வா போ என ஒருமையில் கடுமையாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.


Amit Shah: மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் - அமித்ஷா திட்டவட்டம்




மேலும் இவர் மிரட்டல் விடுக்கும் காட்சியை வீடியோ எடுத்தவரையும் தாக்க முற்பட்டுள்ளார். தற்போது அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி மக்களுக்காக மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டம் இதுபோன்றவர்களிடம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இவ்வாறு நடந்து கொள்ளவது கடும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் நடைபெறாத வண்ணம் இவர்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என  கருத்து தெரிவித்து வருகிறது.


PM Modi:பா.ஜ.க. அரசின் தாரக மந்திரம் என்ன? மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம்!