உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் இரண்டு சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்து, அவர்களின் ஆசனவாயில் பச்சை மிளகாய் தேய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த சிறுவர்கள் மீது என்னவென்றே தெரியாத சில ஊசிகளையும் வலுக்கட்டாயமாக செலுத்தியுள்ளனர். 


பாதிக்கப்பட்ட சிறுவர்களில் ஒருவருக்கு 10 வயதும், மற்றொருவருக்கு 15 வயதும் என்று தெரியவந்துள்ளது. வெளியான இந்த திகிலூட்டும் வீடியோக்களில் சிறுவர்கள் பச்சை மிளகாயை சாப்பிட்டு, ஒரு பீர் பாட்டிலில் நிரப்பப்பட்ட சிறுநீரை குடிக்கின்றன.   அந்த சிறுவர்களை சுற்றியுள்ள கும்பல், அவர்களை அடிப்பது, அதை செய்யவில்லை என்றால் உங்களை அடித்தே கொன்று விடுவோம் என்று மிரட்டுவதும் அந்த வீடியோவில் தெளிவாக தெரிகிறது. 


என்ன காரணம்..? 


கோழிப்பண்ணையில் இருந்து ₹2,000 ரூபாய் பணம் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்களை பிடித்து கட்டி போட்டுள்ளனர். அந்த வீடியோவில், சிறுவர்கள் தரையில் குப்புறப்படுத்திருப்பது போன்றும், அவர்களின் கைகள் முதுக்குப் பின்னால் கட்டப்பட்டு,பேண்ட் கீழே இழுக்கப்பட்டு இருந்தது. அப்போது ஒரு நபர் அவர்களின் ஆசனவாயிலில் பச்சை மிளகாயைத் தேய்த்து விடுகிறார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சிறுவர்கள் இருவரும் வலியால் அலறி துடிக்கின்றனர். தொடர்ந்து, சிறுவர்களுக்கு பெட்ரோல் நிரம்பிய ஊசியை செலுத்துகின்றனர். 


இதையும் படிங்க..


Samudrayaan Mission: சந்திரயானை விடுங்க, சமுத்ரயான் தெரியுமா? ரூ.5000 கோடி செலவு, ஆழ்கடலில் 20 ஆயிரம் அடி பயணம்..!


காவல்துறையினர் அளித்த தகவலின்படி, ஆகஸ்ட் 4 ஆம் தேதி மதியம் 2 மணியளவில் உத்தரபிரதேச மாநிலம் பத்ரா பஜார் காவல் நிலையப் பகுதியின் கொங்கட்டி சௌராஹாவுக்கு அருகிலுள்ள அர்ஷன் சிக்கன் கடையில் எடுக்கப்பட்டது என்று தெரிய வந்துள்ளது. 


இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் பரவி கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. முழு எபிசோடையும் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார், இது சனிக்கிழமை வைரலானது. இதை பார்த்த காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குமார் அகர்வால், காவல்துறையினருக்கு தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.  மேலும், சிறுவரின் ஒருவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், பத்ரா காவல் நிலையத்தில் 8 பேர் மீது ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.