'விலங்கினும் கீழான பிறவியோ மனிதப் பிறவி' என்று ஐயப்படும் அளவுக்கு அவ்வப்போது சில கொடூரமான செயல்களில் மனிதர்கள் ஈடுபடுகின்றனர். அப்படியொரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.


வீட்டில் வளர்க்கப்பட்ட செல்ல நாயுடன் அதன் முதலாளி தம்பதி அத்துமீறிய செயல் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. வீட்டில் வள்ர்க்கப்பட்ட நாயுடன் பெண் உடலுறவு கொள்ள, அதை ஆண் நண்பர் படம் எடுத்து தன் ஹார்ட் டிஸ்கில் பதிவேற்றி வைத்த நிலையில், முன்னதாக இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா கலேலோ. இவர் தனது நாயுடன் பலமுறை பாலியல் உறவில் இருந்துள்ளார். 8 ஆண்டுகளாக இவர் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார். இப்போது அந்தப் பெண்ணுக்கு 36 வயதாகிறது.


இவரது ஆண் நண்பர் ஜெஃப்ரி ஸ்ப்ரிங்கர். இவருக்கும் 36 வயது. இவர் தன் காதலி அவரது நாய்க்குட்டியுடன் பாலியல் உறவில் ஈடுபடும் காட்சியை வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளார். இவர்களின் இச்செயல் எப்படியோ அம்பலமாக அந்நாட்டின் பினெலாஸ் கவுன்ட்டி காவலர்கள் இவர்களை முன்னதாகக் கைது செய்தனர்.


தொடர்ந்து இவர்கள் செய்த குற்றம் நிரூபணமான நிலையில் தம்பதியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்து இவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


பென்சில்வேனியாவிலும் ஒரு சம்பவம்


இதேபோல் கடந்த ஆண்டு அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் நாயுடன் உறவு கொண்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். தனது குழந்தையை கவனித்துக் கொள்ள ஆண்ட்ரூ லெங்லே என்பவர் ஒரு நபரை பணியமர்த்திருந்தார்.


ஆனால் அந்த நபர் குழந்தையை கவனிக்காமல் வீட்டில் இருந்த நாய்க்குட்டியுடன் உறவு கொண்டுள்ளார். இதனை அந்த வீட்டில் இருந்த கேமரா காட்சிகள் மூலம் கண்டு திகைத்த லெங்லே காவல் துறையில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் லெங்க்லே கைது செய்யப்பட்டார். 


இந்தியாவில் நடந்த சம்பவம்


அண்மையில் மகாராஷ்டிரா மாநிலம் கோதேன் கிராமம் அருகே ஷாய்தரி புலிகள் காப்பக வனப்பகுதியில் இப்படியொரு சம்பவம் அரங்கேறியது. இந்தக் காட்டுக்குள் 3 இளைஞர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த நிலையில், இவர்களை வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர்.


அப்போது மூன்று பேரும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த வேட்டைக்காரர்கள் என்பது தெரியவந்தது. இந்நிலையில் அவர்கள் வைத்திருந்த செல்போன்களை வாங்கி வனத்துறையினர் சோதித்தபோது, அதில் இருந்த வீடியோவை பார்த்து அதிகாரிகள் அதிர்ந்தனர்.


காரணம் சில வாரங்களுக்கு முன்பு, இதே காட்டுப்பகுதிக்கு இவர்கள் 3 பேரும் வந்து அங்கிருந்த உடும்பை பாலியல் வன்புணர்வு செய்து அதை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருந்தது அம்பலமானது. தொடர்ந்து இந்நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.




மேலும் படிக்க : புவிசார் அரசியல் பதற்றத்தை தூண்டியுள்ள சீன ஆராய்ச்சி கப்பல்: பேசுபொருள் ஆனது ஏன்?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண