உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது உத்தம்சிங் நகர் மாவட்டம். இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது தாரிக். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், இவரது மூன்றரை வயதே ஆன இரண்டாவது மகனை காணவில்லை என்று கடந்த செவ்வாய்கிழமை போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரின் அடிப்படையில், அவரது மகனை தேடிய போலீஸ் அருகில் உள்ள பரெய்லி மாவட்டத்தில் உள்ள பகுதியில் உள்ள புதர்கள் மண்டிய கால்வாயில் இருந்து சடலமாக மீட்டுள்ளனர். இதையடுத்து, அந்த குழந்தை உயிரிழந்தது எப்படி என்று போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், குழந்தை சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த, போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். குழந்தையின் சடலத்தை தூக்கிக்கொண்டு தந்தை மொகது தாரிக் செல்வதை கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து, மொகது தாரிக்கிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் தனது மகனை தானே கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக உத்தம்சிங்நகர் காவல் கண்காணிப்பாளர் மம்தாவோரா கூறியதாவது, “மொகது தாரிக்கிற்கு சொந்தமாக ட்ரக் உள்ளது. அவர் அந்த ட்ரக்கை ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். ஆனால், அதற்கான வேலை தொடர்ந்து வராமல் இருந்ததால் கடந்த சில காலமாகவே அவர் கடுமையான பண நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். மேலும், தனது ட்ரக்கிற்கு இ.எம்.ஐ. கட்ட முடியாமலும் அவதிப்பட்டு வந்துள்ளார்.
மேலும் படிக்க : அமெரிக்காவில் காணாமல் போன சிறுமி: 2 ஆண்டுகளுக்குப்பின் படிக்கட்டு அடியில் இருந்து கண்டுபிடிப்பு!
மேலும் படிக்க : Crime : சென்னை தொழிலதிபரிடம் பெண்குரலில் பேசி ரூபாய் 14 லட்சம் மோசடி...! வடமாநில சகோதரர்கள் கைது...!
அதுமட்டுமின்றி, உயிரிழந்த அவரது மகனுக்கு பிறந்ததில் இருந்தே ஹீமோபிலியா எனப்படும் அரியவகை ரத்த குறைபாடு நோய் இருந்துள்ளது. இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க அதிகளவில் பணம் தேவைப்பட்டுள்ளது. அதற்காக அவர் வாங்கிய தொகையும் அவரை மேலும் கடனாளி ஆக்கியுள்ளது. இதனால், தனது மகனின் சிகிச்சைக்கு பணம் கொடுக்க முடியாமலும், போதிய வருவாய் இன்றி கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த மொகது தாரிக் தனது மகனை தானே கொலை செய்துள்ளார்” எனறு கூறியுள்ளார்.
மகனின் மருத்துவ சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாத தந்தை, தான் பெற்ற மகனையே கொலை செய்து கால்வாயில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்