தனக்கு பால் கொடுக்காமல், குழந்தைகளுக்கு முதலில் பால் கொடுத்ததாக கூறி மனைவிக்கு முத்தலாக் கொடுத்த சம்பவம் அகமதாபாத்தில் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.


அகமதாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், பால் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், மூன்று முறை தலாக் கூறியதாக கணவர் மீது புகார் அளித்துள்ளார். வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் மாமியார் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.


கரஞ்சில் வசிக்கும் 31 வயதான அந்தப் பெண், வரதட்சணைக்காக தனது கணவர் மற்றும் மாமியார் மனரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். தனது கணவர், தனது குழந்தைகளுக்கு முதன்முதலில் பால் வழங்கியதற்கு முத்தலாக் கூறியதாக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு காவல்நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்தார். 




நடந்தது என்ன?


அப்பெண்ணின் மாமியார், மாமனார் மற்றும் கணவர் கடந்த 2021 டிசம்பரில் தனது பெற்றோரிடம் இருந்து ரூ. 1 லட்சம்  வாங்கி வருமாறு கேட்டனர். இதனால், அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இதன்காரணமாக அவர்கள் தன்னை தாக்கியதாக  பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.


சண்டைக்குப் பிறகு, அவரது ஐந்து வயது மகள் பால் மற்றும் தின்பண்டங்களைக் கேட்டுள்ளார்.  அவர் தனது குழந்தையை கவனித்துக் கொண்டிருந்தபோது, ​​அதே நேரத்தில் அவரது கணவரும் பால் கேட்டார். ஆனால், முதலில் தன் மகளுக்கு பால் கொடுத்துள்ளார். இது கணவனுக்கு கோபத்தை உண்டாக்கியுள்ளது.


மனைவி தாமதமாக பால் கொடுத்ததால் மனமுடைந்த கணவர், உறவினர்கள் மற்றும் பெற்றோர் முன்னிலையில் மனைவிக்கு முத்தலாக் கொடுத்துள்ளார்.


பாதிக்கப்பட்ட பெண் புகார்


அப்பெண்ணின் மூத்த சகோதரர் தனது அத்தையிடம் தனது கணவருடன் பிரச்சினையை தீர்த்து வைக்கும்படி கேட்டுள்ளார். ஆனால் கணவர் முத்தலாக் கொடுக்கப்பட்டதை மீண்டும் வலியுறுத்தினார். இதனைத்தொடர்ந்து, அகமதாபாத் வந்தபோது போலீசில் புகார் அளித்தார்.


பாதிக்கப்பட்ட பெண், தனது திருமணத்தில் பெற்ற பரிசுகள் அனைத்தும் நதியாத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், வரதட்சணைக்காக மாமியார் தன்னை சித்திரவதை செய்யத் தொடங்கியதாகவும் குற்றம் சாட்டினார். தனது கணவர் வேலையில்லாமல் இருப்பதால் காலப்போக்கில் வரதட்சணைக்கான கோரிக்கைகள் அதிகரித்ததாக அவர் கூறினார். தான் மனரீதியாக துன்புறுத்தப்பட்டு தாக்கப்பட்டதாகவும், அது பின்னர் தீவிரமடைந்ததாகவும் அவர் கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண