கரப்பான்களை விரட்ட... 

 

குப்பைகளை நீக்காமல் விட்டாலோ, தூசிகளை அவ்வப்போது தட்டாமல் விட்டாலோ கரப்பான்கள் வர வாய்ப்பு உள்ளது. உணவு பண்டங்கள் எங்கு உள்ளதோ அதை உண்ண கரப்பான்கள் வந்துவிடும். இவை சாக்கடை, குப்பைக் கூடைகள், குழாய் ஓட்டைகள் ஆகிய இடங்களில் வசிக்கும். இது நாம் இருக்கும் வீட்டில் குடியேறாமல் இருக்க சில டிப்ஸ்.

 



 

கிராம்பு

 

கரப்பான் பூச்சி புழங்கும் இடத்தில் கிராம்பை வைக்கலாம் அல்லது கிராம்பு எண்ணெயை சிறிது தண்ணீரில் கலந்து ஸ்பிரே செய்யவும். இதன் வாசனைக்கு கரப்பான் பூச்சி வராது. முக்கியமாக அவ்வப்போது கிராம்பை மாற்ற வேண்டும்.

 



 

சர்க்கரை மற்றும் பேக்கிங் சோடா

 

சர்க்கரை மற்றும் பேக்கிங் சோடாவை பாதிக்கு பாதி கலந்து, கரப்பான் பூச்சி புழங்கும் இடத்தில் தூவவேண்டும், கரப்பான் பூச்சி அந்த இனிப்பை சாப்பிடவரும். சாப்பிட்ட கரப்பான்கள் உடனே இறந்துவிடும்.

 

பிரியாணி இலை

 

பிரியாணி இலையை நன்றாக பொடி செய்யவும். கரப்பான் பூச்சி அதிகம் சுற்றும் இடத்தில் அப்பொடியைத் தூவவும். இவ்விலையின் வாசனையால் பொடி தூவிய இடங்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் கரப்பான் பூச்சி அண்டாமல் இருக்கும்.



 

 

மிளகு, வெங்காயம் மற்றும் பூண்டு கலவை

 

மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட்டை ஒன்றாக கலக்கவும். தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றவும். இதனை கரப்பான்கள் வசிக்கும் இடங்களில் ஸ்பிரே செய்து அவற்றைக் அகற்றலாம்.

 



போரிக் ஆசிட்

 

கோதுமை அல்லது மைதா மாவை போரிக் ஆசிட் சேர்த்து பிசையவும். இந்த கலவையை சிறு உருண்டைகளாக பிடித்து, கரப்பான் பூச்சி வரும் இடத்தில் வைக்க வேண்டும். இவ்வுருண்டைகளை சாப்பிட்ட கரப்பான்கள், இறந்துவிடும்.