ஜவுளிக் கடையில் ஆடைகள் திருடிய ராஜஸ்தான் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி கோவிந்தசாலை பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் (32). இவர் புதுவை செயின்ட் தெரேஸ் வீதியில் ரெடிமேட் ஆடைகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 15 ஆம் தேதி அன்று இவரது கடையில் பூட்டு உடைக்கப்பட்டு 1 லட்சம் மதிப்புள்ள ஆடைகள் திருடு போயிருந்தது. இது குறித்து ஓம் பிரகாஷ் பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
ஏழை முதல் பணக்காரர்கள் வரை வாங்கி சுவைக்கும் கடலூர் குள்ளஞ்சாவடி இனிப்பு வகைகள்...!
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது 2 பேர் அந்த கடையின் உள்ளே புகுந்து ஆடைகளை திருடிக்கொண்டு ஒரு காரில் ஏறி தப்பி செல்வது தெரியவந்தது. அந்த காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த கார் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மர் பகுதியை சேர்ந்த ரியாஸ் முகமது (31) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையிலான தனிப்படை போலீசார் ராஜஸ்தான் மாநிலத்தில் முகாமிட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
Mayiladuthurai: எனக்கு விடுப்பு கொடுத்துருங்க! திமுகவினரால் கடிதம் எழுதிய அதிகாரி
அங்கு பதுங்கியிருந்த ரியாஸ் முகமதுவை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தனது நண்பர் உசைன் (22) என்பவருடன் திருப்பதி, புதுச்சேரிக்கு சுற்றுலா வந்ததாகவும் மீண்டும் ஊர் திரும்பி செல்ல பணம் இல்லாததால் துணிக்கடையில் ஆடைகளை திருடி அதனை ராஜஸ்தான் செல்லும் வழியில் பல இடங்களில் டோல்கேட் அருகே தெருவோர கடை வைத்து குறைந்த விலைக்கு விற்பனை செய்ததாக கூறினர். அவர்களிடம் இருந்து விற்பனையாகாமல் இருந்த ஆடைகள், 2 செல்போன்கள் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை புதுவைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
’’அதிக விலைக்கு மதுவிற்றதுமல்லாமல், தரக்குறைவாக பேசியதால் கொலை’’- வட மாநில இளைஞர் வாக்குமூலம்