தமிழ்நாடு:



  • வங்கக்கடலில் வரும் 9-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

  • தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முழுவதும் பலத்த மழை. உடுமலைப்பேட்டையில் உள்ள திருமூர்த்தி மலையில் காட்டாற்று வெள்ளம்.

  • தமிழ்நாட்டில் இன்றும் 7 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

  • முல்லைப் பெரியாறு அணையில் அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு

  • பேபி அணையை பலப்படுத்திய பிறகு முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீர் தேக்கப்படும் – அமைச்சர் துரைமுருகன்

  • தமிழ்நாடு முழுவதும் வேலை வாங்கித் தருவதாக மோசடி : அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் உதவியாளர் உள்பட 30 பேர் கைது

  • “லிவிங் டு கெதர்” முறையில் சேர்ந்து வாழ்பவர்கள் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உரிமையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

  • தமிழ்நாடு முழுவதும் பட்டாசு வெடித்ததில் விதிமீறல் : 2 ஆயிரத்து 500 பேர் மீது வழக்குப்பதிவு

  • தீபாவளி காரணமாக சென்னையில் காற்றின் மாசு 385 ஆக உயர்வு : தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்

  • புதுக்கோட்டையில் அனுமதியின்றி நடத்தப்பட்ட மஞ்சு விரட்டு : மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழந்த பரிதாபம்

  • உலகப்புகழ் பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபம் : கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதியில்லை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு


இந்தியா:



  • சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 2.5 சுங்கவரி முற்றிலும் நீக்கம் – மத்திய அரசு உத்தரவு

  • பிரபல நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன்கானின் போதைப்பொருள் வழக்கு : மும்பையில் இருந்து டெல்லி போதைப்பொருள் தடுப்புக்குழுவிற்கு மாற்றம்

  • ஆர்யன்கான் போதைப்பொருள் வழக்கு : சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு

  • கேதார்நாத் கோவிலில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஆதி சங்கரர் சிலை திறப்பு – பிரதமர் மோடி நேரில் திறந்து வைத்தார்

  • பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு : 700 அதிகாரிகள் பணியிடை நீக்கம்


 


விளையாட்டு:



  • உலககோப்பை சூப்பர் 12 ஆட்டத்தில் இந்திய அணி ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

  • சூப்பர் 12 சுற்று போட்டியில் 52 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தியது நியூசிலாந்து

  • உலககோப்பை டி20 போட்டியில் குரூப் ஏ பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலியா – மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா மோதுகின்றன


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண