தீபாவளி என்றாலே நம் அனைவரின் மனதிலும் கொண்டாட்டம் நிரைந்துவிடும். புத்தாடை அணிந்து குடும்பத்துடன் பட்டாசுகள் வெடித்து அன்றைய தினத்தை பெரியவர்கள் என சிறியவர்கள் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடும் நாள். அதற்கு அடையாளமாக நம் மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பலகாரங்கள் கொண்டு பகிர்ந்து கொள்வது வழக்கம்.
இந்த நிலையில் நடப்பாண்டு தீபாவளி வரும் 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் ஜவுளிக்கடைகளில் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள இனிப்பு, பேக்கரி கடைகளில் பல வகை இனிப்புகள் தயாரிக்கும் பணியில் கடை உரிமையாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், ஏழை மற்றும் நடுத்தரவாசிகளின் இனிப்பு கடை என்று அழைக்கப்படும் கடலூர் மாவட்ட குள்ளஞ்சாவடி பகுதியில் பெண்கள் மட்டுமே இனைத்து நடத்தாமல் இனிப்பகத்தில் தீபாவளி இனிப்புகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த குள்ளஞ்சாவடி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக ஏராளமான தொழிலாளர்கள் இனிப்பு கார வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இன்றும் கடலூருக்கு வந்து குள்ளச்சாவடி வழியாக செல்லும் பயணிகள் இங்குள்ள கடைகளில் லட்டு, ஜாங்கிரி போன்ற இனிப்பு மற்றும் கார வகைகளை வாங்கி செல்வது வழக்காமாக உள்ளது. இப்பகுதியில் நடைபெறும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் இங்கு தயார் செய்யப்படும் இனிப்பு கார வகைகள் தான் பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள கடைகளில் பெண்கள் மட்டுமே ஒன்றிணைந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வேலை வாய்ப்பும் நல்ல வருமானமும் கிடைப்பதாக தொழிளாலர்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
முன்னோர்கள் காலத்தில் சிறிய அளவில் ஜிலேபி, மைசூர்பாகு, லட்டு, மிக்சர் உள்ளிட்டவைகளை தயாரித்து விற்பனை செய்து வந்தோம். தற்போது காலத்திற்கு ஏற்ப ஸ்வீட், கார வகைகளை அதிகப்படுத்தி உள்ளோம். ஸ்வீட் வகைகளில் ஜிலேபி, மைசூர்பாகு, லட்டு, பூந்தி, பாதுஷா, உள்ளிட்டவைகளும், கார வகைகளில் மிக்சர், ஓட்டுபக்கோடா, டால்ஸ்மிக்சர், முள்ளுமுறுக்கு, காராபூந்தி, காரசேவ், வெண்ணெய்சேவ், மசாலா கடலை உள்ளிட்டவைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். எங்களுடைய வாடிக்கையாளர்களே ஏழை, நடுத்தரவாசிகள் தான். பெரிய ஸ்வீட் கடையைவிட, எங்களிடம் விலையும் குறைவு, தரமும் இருக்கும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை புதியதாக தயாரித்த பொருட்களை விற்பனைக்கு வைப்போம்.
தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும்பட்சத்தில் ஸ்வீட், காரம் கேட்டு ஆர்டர் வந்துள்ளது. மகளிர் சுய உதவி குழு மற்றும் பலர் தீபாவளி பண்டு பிடித்தவர்கள் எங்களிடம் தான் இனிப்புகான ஆர்டர் கொடுப்பார்கள். இன்னும் தீபாவளிக்கு நான்கு நாட்களே உள்ள நிலையில் தற்போது தீபாவளியை முன்னிட்டு இனிப்பு தயாரிப்பில் அதிகளவு ஈடுபட்டு வருகிறோம் தங்களிடிம் வந்து இனிப்பு வாங்கி செல்பவர்கள் சுட சுட வேண்டும் என அதிகம் பேர் விரும்புவதால் வரும் 3 ஆம் தேதி வரை ஸ்வீட், காரம் தயாரித்து கொண்டே இருப்போம்.