திருவண்ணாமலை குபேர நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் லட்சுமி வயது (48). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவனந்தல் கிராமத்தில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அன்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் உள்ள சென்று பார்தததில் அறையில் இருந்து பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த 8 பவுன் நகைகளை மர்ம ஆசாமி திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா காவல்நிலையத்தில் லட்சுமி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் முதற்கட்ட விசாரணையில் அதே பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயந்தி என்பவரிடம் காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.


 




 


இந்த விசாரணையில், லட்சுமி வீட்டின் பூட்டை கள்ளச்சாவியில் திறந்து உள்ளே சென்று நகைகளை திருடிச்சென்றதை ஜெயந்தி ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஜெயந்தியை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் ஜெயந்தியிடம் இருந்து நகைகளை மீட்டனர்.


அதேபோல் திருவண்ணாமலை அருகே மூதாட்டியிடம் தண்ணீர் கேட்பது போல மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டரை அடுத்த உள்ள சு.நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பூங்காவனம் வயது (75). கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவருடைய கணவர் இறந்துவிட்டார். பின்னர் கணவரை இழந்த பூங்காவனம் தனிமையில் வசித்து வருகிறார். ஆனால் நேற்று சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காரில் வந்துள்ளார். பின்னர் மூதாட்டி பூங்காவனத்திடம் தண்ணீர் கேட்டுள்ளார், மூதாட்டி வீட்டில் உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்துள்ளார்.


 




 


அப்போது திடீரென மூதாட்டி அணிந்து இருந்த 2 பவுன் செயினை பறித்துக்கொண்டு அந்த பெண் காரில் ஏறி தப்பித்துச்சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி பூங்காவனம் கூச்சல் போட்டுள்ளார். சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர். ஓடிவந்து மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற பெண்ணை பிடிக்க முயன்றனர்.ஆனால் அந்த பெண் காரில் ஏறி மாயமானார். இது குறித்து வெறையூர் காவல்நிலையத்தில் மூதாட்டி புகார் அளித்துள்ளார். இந்த பூகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை நகர்புறங்கள் மற்றும் கிராம பகுதிகளில் தொடர்ந்து தற்போது திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. காவல்துறையினர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்களை தற்போது வரையில் பிடிக்கவில்லை என்பது குறிப்பிட்ட தக்கது.


Crime : மகள் கண்முன்னே தாயை கொடூரமாக கொன்ற தந்தை.. பதறவைத்த சம்பவம்.. இப்படி ஒரு கொடூரமா?




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண