புனேவின் வகாட் பகுதியில் தனது ஒன்பது வயது மகள் கண்முன்னே கணவர் ஒருவர் தனது மனைவியைக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


மனைவி கொலை


மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய குற்றவாளியை கைது செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர். இறந்தவர் பெயர் லலிதா பூஜாரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவருக்கு 30 வயது ஆகிறது. இவரது கணவர் பெயர் ரமேஷ். 35 வயதாகும் இவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு மொத்தம் மூன்று குழந்தைகள் இருப்பதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.



கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு


குழந்தைகள் மூன்று பேரில் ஐந்து வயது மகன் மற்றும் ஒன்பது வயது மகள் இருவரும் கொலை நடந்த போது வீட்டில் இருந்துள்ளனர். இந்த தம்பதியின் 11 வயது மூத்த மகள், உறவினர் வீட்டிற்கு சென்றதால் வீட்டில் இல்லாமலிருந்ததாக காவக்துறையினர் கூறினர். அந்த நேரத்தில்தான் அந்த சம்பவம் நடந்துள்ளது. ரமேஷ் தனது மனைவியைத் தாக்கியதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் அழைப்பு வந்ததாக அந்த ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.


தொடர்புடைய செய்திகள் : மீண்டும் ஒரு போரா? தைவானில் கால்பதித்த நான்சி பெலோசி! சீறும் சீனா.. உச்சக்கட்ட பதற்றம்.


சம்பவ இடத்தில் காவல்துறை


போன் மூலம் தகவல் வந்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், லலிதா ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டுள்ளனர். கணவன் மற்றும் மனைவி இடையே குடும்ப பிரச்னை தொடர்பாக சில நாட்களாகவே சிறு சிறு தகராறுகள் ஏற்பட்டு வந்ததாக அக்கம் பக்கத்தினர் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.



மகள் கண்முன் கொலை


இது குறித்து கிடைத்த தகவல்களைப் பற்றி வாகாட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செய்துயாளர்களிடம் பேசினார். அவர் பேசுகையில்,"திங்கள்கிழமை விடிவதற்கு முன்பாக, அதாவது பின் இரவு நேரத்தில் கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அவர்கள் கத்தி பேசி சண்டையிட்டதால் எழுந்த சத்தம் காரணமாக அவர்களின் ஒன்பது வயது மகள் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டுள்ளார். அந்த குழந்தை எழுந்த நேரத்தில் அந்த நபர் தனது மனைவியை கல் தரை ஓடு ஒன்றால் தாக்கி கொலை செய்துள்ளார். இதனை அந்த ஒன்பது வயது மகள் கண்டு அதிர்ந்துள்ளார். மகளின் கண்முன்னே மனைவியைக் கொன்றது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது” என்று வாகாட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலாஜி தாக்கூர் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.