வவுனியா சிறையிலுள்ள 6 ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் எல்லைதாண்டி மீன் பிடித்ததற்காக கைது செய்யப்பட்ட 6 மீனவர்களையும் விடுவிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


மேலும், விடுதலையான 6 மீனவர்களும் மீண்டும் எல்லை தாண்டி மீன் பிடித்தால் 6 மாதம் சிறை பிடிக்கப்படும் என்றும் இலங்கை மன்னார் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


கடந்த 21ஆம் தேதி இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களையும் இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வவுனியா சிறையில் அடைத்தனர்.


 இந்த நிலையில், இன்று மீண்டும் இரண்டாம் முறையாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது, மீனவர்கள் ஆறு பேரையும் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் மீனவர்கள் ஆறு பேரும் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


ராமநாதபுரம் மாவட்டம், 
ராமேஸ்வரத்திலிருந்து  மீன்பிடிக்கச் சென்ற ஒரு படகையும், அதிலிருந்த 6 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த 21 ந்தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.


ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று (20) காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நிலையில்.


 


மீனவர்கள் நள்ளிரவு இலங்கை தலைமன்னாருக்கும்- நாச்சிகுடா வுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இரண்டு படகையும் அதில் இருந்த 11 மீனவர்களையும் கைது செய்தனர்.


இதில் ஒரு படகையும் அதிலிருந்து 5 மீனவர்களும் இயந்திர கோளாறு காரணமாக காற்றின் வேகத்தால் எல்லை தாண்டி வந்ததாக மீனவர் தெரிவித்ததையடுத்து படகை சோதனை செய்த இலங்கை கடற்படையினர் இயந்திர கோளாறு உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த படகையும் அதிலிருந்து 5 மீனவர்களையும் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.


இந்நிலையில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த தூதர் என்பவருக்கு சொந்தமான மற்றொரு படகையும் அதிலிருந்த பாலமுருகன், அந்தோணி, தங்கபாண்டி, அஜித், கிருஷ்ணன், மடுகு பிச்சை ஆகிய ஆறு மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக படகுடன் கைது செய்த இலங்கை கடற்படையினர் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று  விசாரணை நடத்தினர்.


சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் நடத்திய முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் 6 மீனவர்களும் மன்னார் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு மன்னார்  நீதிமன்றத்தில் தற்போது ஆஜர்படுத்தப்பட்டனர். இதனை அடுத்து மீனவர்களுக்கு வரும் நான்காம் தேதியான இன்று  வரை சிறைகாவல் தண்டனை  விதிக்கப்பட்டது.



 இதனை அடுத்து மன்னார்  போலீசார் அவர்களை வவுனியா சிறைச்சாலையில் அடைத்தனர். 
இதனை அடுத்து இன்று சிறைகாவல் நிறைவடையும் நிலையில் மீண்டும் இரண்டாம் முறையாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், மீனவர்களின் வழக்கை விசாரித்த நீதிபதி என் முரளிதரன் இந்த ஆறு மீனவர்களையும் நிபந்தனையுடன் கூடிய விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் இதனை எடுத்து வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு ஓரிரு நாட்களில் சொந்த ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண