திருச்செந்தூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த திருச்செந்தூர் அதிவிரைவு ரயில் கடத்திவரப்பட்ட சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட கணவன் மனைவி உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.


Tata Neu : டாடாவின் அடுத்த மூவ்! அதிர்ச்சியில் போன்பே,கூகுள்பே.. ஷாப்பிங்கும் உண்டு! பக்கா ப்ளான்!




மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார்  பாஸ்கரன், சதீஷ்குமார், சரவணன், பஞ்சவர்ணம், ஆகியோர் நான்கு பேரும்  திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் திருச்செந்தூரில் அதி விரைவு    ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ரயில் பெட்டியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த பைகளை சோதனை செய்தபோது  அதில் பண்டல் பண்டலாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. 




மருத்துவர் வீட்டில் 97 சவரன் கொள்ளை - தீரன் பட பாணியில் 2 கைரேகைகளை வைத்துக்கொண்டு அல்லாடும் போலீஸ்


மேலும், ரயிலில் சந்தேகப்படும் வகையில் இருந்த பைகள் அருகே இருந்த திருச்சி தாராநல்லூரை சேர்ந்த 25 வயதான சிவசங்கர்,  அவரது 20 வயதான மனைவி சத்யா மற்றும் அவரது தம்பி 19 வயதான சரபேஸ்வரர் ஆகியோரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் போலீசார் விசாரணை செய்த போது முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்துள்ளனர். உடன் அவர்களை மயிலாடுதுறை  ரயில்வே நிலையத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தபோது 23 பாக்கெட்டுகளில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய 46 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. 




HBD Rashmika Mandana: பார்வ கற்பூரதீபமா.. ராஷ்மிகா மந்தனாவை பத்தி இந்த விஷயங்கள் தெரியுமா உங்களுக்கு?


இதுகுறித்து மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசங்கர் மற்றும் அவரது மனைவி சத்யா, சரபேஸ்வரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கைது செய்தவர்களை தஞ்சாவூர் தமிழ்நாடு ரயில்வே போலீஸாரிடம் மேல் விசாரணைக்காக ஒப்படைத்தனர். மேலும் முதற்கட்ட விசாரணையில்  இவர்கள் ஆந்திராவில் இருந்து திருச்சிக்கு கஞ்சா கடத்தி வரப்பட்டதும், திருச்சியில் போலீசாரின் சோதனையை அறிந்து அங்கு இறங்காமல் ரயிலில் தொடர்ந்து பயணித்து எதுவும் தெரிய வந்துள்ளது.  மேலும் நீண்ட நாட்களாக இதுபோன்று தொடர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்ததும், தற்போது இவர்கள் சிக்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.