பிரபல சினிமா நட்சத்திரம் ராஷ்மிகா மந்தனாவுக்கு பிறந்தநாள் இன்று!
ராஷ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டு ‘கிரிக் பார்ட்டி’ என்ற திரைப்படத்திம் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார்.தெலுங்கு சினிமாவில், 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கீதா கோவிந்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தத்தில் தன் சிறப்பான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இதை தொடர்ந்து, ஹிட் படமான புஷ்பா படம் மூலம் இந்திய திரையுலம் முழுவதும் பிரபலமானார் ராஷ்மிகா மந்தனா. இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் நடிக்கும் 'அனிமல்' (Animal) படத்தில் தான் தற்போது ராஷ்மிகா இணைந்துள்ளார்.
இவர் ‘ National Crush’ என்று நெட்டிசன்களால் அன்புடன் அழைக்கப்படுபவர். சுமார் 20 மில்லியன் பேர் இவரை இன்ஸாடாகிராமில் பிந்தொடர்கிறார்கள். சினிமா துறைக்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே, நடித்த எல்லா படங்களும் ஹிட் ஆனது, ராஷ்மிகாவுக்கு.
தமிழில் ராஷ்மிகா நடித்த சுல்தான் படமும் செம்ம ஹிட்!!
இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையான இவரின் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தனது பிறந்தநாள் குறித்து முந்தைய நாள் ராஷ்மிகாவின் ட்டீட்....
ராஷ்மிகா மந்தனாவை ஒரு நடிகையாக அனைவருக்கும் தெரியும். அவரை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா? ……இதோ!
ராஷ்மிகா மந்தனா கர்நாடக மாநிலத்தில் உள்ள கொடங்கா என்ர ஊரில் பிறந்து வளர்ந்தவர். மைசூர், கூர்க் பகுதியில் தனது பள்ளி, கல்லூரி படிப்பைஒ முடித்தார்.
திரையில் உலா வரும் ராஷ்மிகா உளவியல், இதழியல் மற்றும் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர்.
கல்லூரி காலத்தில் மாடலிங் துறையில் தனக்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொண்டவர். clean and clear times fresh face of india என்ற விருதினை வென்றுள்ளார். இதன் பிறகுதான், ராஷ்மிகா சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
ராஷ்மிகா நடித்த விளம்பரம் ஒன்றை பார்த்துவிட்டு,- ரிஷப் ஷெட்டி தனது க்ரிக் பார்ட்டி படத்தில் அவரை கதாநாயகியாக்கினார். இதுவே ராஷ்மிகா சினிமாவில் அறிமுகமான படம்.
பின்னர், கீதா கோவிந்தம் படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.
2018 ஆம் ஆண்டில், நடிக்க தொடங்கிய காலத்திலேயே, கனட படமான ‘சமக்’ என்ற படத்தில் நடித்ததற்காக ஃபில்ம் ஃபேர் விருது வென்றார்.
என்னதான், மிகவும் பிரபல நடிகை, மாடல் என்றாலும், சுற்றுசூழல் மீது அக்கறை மிகுந்த ராஷ்மிகா, நீர் மாசுபாடு குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்று நடித்தார். அதற்கு சம்பளம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என கலக்கும் ராஷ்மிகா இன்னும் நிறைய படங்களில் நடிக்க வாழ்த்துகள். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ராஷ்மிகா!