கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் கங்காதரன். வயது 34 இவர், காந்திபுரம் காளிங்கராயன் வீதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். இவர் தற்பாலின சேர்க்கையில் நாட்டம் கொண்டவர் எனவும், Bluetoo app என்ற மொபைல் செயலி மூலம் தற்பாலின சேர்க்கையாளர்களிடம் வீடியோ மற்றும் சாட்டிங்கில் உரையாடி வந்ததாகவும் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த செயலி மூலம் சிவானந்தா காலனி காந்தி நகரைச் சேர்ந்த பிரசாத் (வயது 19) என்பவர், கங்காதரனை செல்போனில் தொடர்பு கொண்டு தற்பாலின சேர்க்கைக்காக வடகோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள ரெயில் தண்டவாளம் பகுதிக்கு வரச் சொல்லியுள்ளார்.


இதன்படி அங்கு சென்ற கங்காதரன் பிரசாத் உடன் கங்காதரன் நிர்வாணமாக ஒரின சேர்க்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்த போது, அப்பகுதிக்கு வந்த நிஷாந்த், மாணிக்கம் ஆகியோர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் பிரசாத், நிஷாந்த், மாணிக்கம் ஆகிய மூவரும் இணைந்து கங்காதரனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது கங்காதரன் பணம் இல்லை எனக் கூறியதால், அவரிடம் இருந்த அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு மூவரும் தப்பி சென்று விட்டனர்.


இந்த சம்பவம் குறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் கங்காதரன் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசாத்தினை காவல் துறையினர் கைது செய்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும், மொபைல் செயலி மூலம் அறிமுகமாகி தற்பாலின சேர்க்கையாளர்களை வரவழைத்து நண்பர்களுடன் இணைந்து மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட பிரசாத்தினை நீதிமன்ற காவலில் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.


இதேபோல மொபைல் செயலி மூலம் தற்பாலின சேர்க்கையில் நாட்டம் கொண்ட மேலும் ஒரு இளைஞரை மிரட்டி இக்கும்பல் பணம் பறித்தது தெரியவந்துள்ளது. காந்திபுரம் பகுதியை சேர்ந்த அபிராம் என்ற 31 வயது இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு தற்பாலின சேர்க்கையில் ஆர்வம் இருந்ததாகவும், Bluetoo app என்ற மொபைல் செயலி மூலம் தற்பாலின சேர்க்கையாளர்களிடம் வீடியோ மற்றும் சாட்டிங்கில் உரையாடி வந்ததாகவும் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த செயலி மூலம் அறிமுகமான பிரசாத் அபிராமினை தொடர்பு கொண்டு சாய்பாபா காலணி பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி அங்கு சென்ற அவரை 3 இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள இரயில்வே தண்டவாள பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


அங்கு தற்பாலின சேர்க்கையில் ஈடுபட்ட பின்னர், அபிராமை மரக்கட்டை மற்றும் இரும்பால் தாக்கி ஆப்பிள் ஐபோன் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக அபிராம் அளித்த புகாரின் பேரில், சாய்பாபா காலனி காவல் துறையினர் மேலும் ஒரு வழக்கினை பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் பிரசாத்தினை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் ரத்தினபுரி பகுதியை நிஷாந்த் என்ற 22 வயது கல்லூரி மாணவரை கைது செய்த காவல் துறையினர், தலைமறைவாக உள்ள மாணிக்கம் என்பவரை தேடி வருகின்றனர். மொபைல் செயலி மூலம் தற்பாலின இளைஞர்களை குறி வைத்து கல்லூரி மாணவர்கள் பணம் பறித்ததாக அடுத்தடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.