திருண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே வீடு புகுந்து திருடிய வாலிபரை, வீட்டு உரிமையாளர் வீட்டுக்குள் வைத்துபூட்டி போலீசில் ஒப்படைத்தார். அந்த நபர் போதையில் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அடுத்த உள்ள பெருந்துறைப்பட்டு நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் வயது ( 50). இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் வெங்கடேஷ் நேற்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு தனது விவசாய நிலத்திற்கு சென்று இருந்தார். வேலைகளை முடித்து விட்டு பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ், பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் பீரோவை உடைத்து அதில் உள்ள துணிமணிகள் மற்றும் பொருட்களை தேடிக் கொண்டிருந்தார்.


மேலும் படிக்க: குப்பை தொட்டியில் 43 சவரன் நகையை வீசிய பெண்ணால் பரபரப்பு.. நடந்தது என்ன..?


 




உடனே சுதாரித்துக் கொண்ட வெங்கடேஷ் வீட்டை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு வாணாபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.  இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை வீட்டின் உள்ளே இருந்த நபரை மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அந்த வாலிபர் அதிகபோதையில் இருந்ததால் அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து அந்த வாலிபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த மாயவன் மகன் அண்ணாமலை வயது (32) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வெங்கடேசன் மீது திருக்கோவிலூர், மணலூர்பேட்டை மற்றும் செங்கம், தண்டராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குவழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியவந்ததுள்ளது.


மேலும் படிக்க: Kaali poster Issue: காளி வேடம்.. கையில் சிகரெட்.. ஆவணப்பட இயக்குநர் லீனா மீது டெல்லி காவல்துறையில் புகார்..


 




போதையில் இருப்பதால் அவரை விசாரிக்க முடியவில்லை என்றும், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், போதை தெளிந்த பிறகே அவரிடம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.  வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.


மேலும் படிக்க: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் தள்ளுபடி  




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண