இயக்குநர் லீனா மணிமேகலை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்த அவரது படத்தின் போஸ்டர் ஒன்று காளியை அவமதிப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், அவர் மீது இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஜூலை 2 அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் லீனா மணிமேகலை பகிர்ந்த அவரது திரைப்படத்தின் போஸ்டரின் சர்ச்சையில், டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். மேலும் அவர் படத்தின் மீது தடை விதிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார் ஒரு பெண் காளியின் வேடத்தில் புகை பிடிப்பது போல சித்தரிக்கப்பட்டிருப்பது இந்துக்களின் உணர்வுகளையும், நம்பிக்கையையும் புண்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார். 







டெல்லி காவல்துறையினர் சைபர் குற்றப் பிரிவுக்கு அளிக்கப்பட்டுள்ள புகாரில், `லீனா மணிமேகலை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் உள்நோக்கத்தோடு இந்து சமூகத்தின் மத உணர்வுகளைப் புண்படுத்துமாறு உருவாக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் அவர் மீது சட்டப்பிரிவுகள் 295ஏ, 298, 505, 67, தகவல் தொழில்நுட்பச் சட்டம் முதலானவற்றின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் கூறப்பட்டுள்ளது. 


தனது `காளி’ திரைப்படத்தின் போஸ்டருக்கு வலுத்திருக்கும் எதிர்ப்பு காரணமாக, இயக்குநர் லீனா மணிமேகலை தனது திரைப்படத்தில் கடவுள் காளி ரொரொண்டோ நகரத்தில் வலம் வருவதைப் போல கதையை உருவாக்கியிருப்பதாகக் கூறியுள்ளார். 


தனது படத்திற்கு வந்திருக்கும் எதிர்ப்பு குறித்து பேசியுள்ள இயக்குநர் லீனா மணிமேகலை, `எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண