சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த  உள்ள செங்கோட்டை பகுதியை சேர்ந்த செந்தில் வேல் மகன் ராம். 27 வயதான ராம் நேற்று இரவு தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது செல்போன் மூலம் ராமுவை யாரோ அழைத்ததாக கூறப்படுகிறது.

 





இந்நிலையில் ராமு செங்கோட்டை கிராமத்தின் அருகே உள்ள  இம்மனேந்தல் கண்மாய் பகுதிக்கு தனியாக சென்றுள்ளார். அப்பொழுது மர்ம நபர்கள் ராமுவை கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்துள்ளனர். ராமுவை கொலை செய்த பிறகு உடலை கண்மாய் பகுதியில் வீசிவிட்டு தலையை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர்.



 

தகவல் அறிந்து வந்த மானாமதுரை காவல்துறையினர் ராமுவின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு இரவில் இருந்து அப்பகுதியில் தலையை தேடி வருகின்றனர்.  ராமுவின் தலை நீண்ட நேரமாக தேடியும் கிடைக்காததால் காவல்துறையினர் இந்த விசாரணையை மேலும் துரிதப்படுத்தியுள்ளனர். இளைஞரின் தலையை வெட்டி எடுத்துச் சென்றுவிட்டு, உடலை மட்டும் வீசிச் சென்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 



 




 







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர