தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியில் கடந்த மாதம் பூட்டி இருந்த வீட்டின் கதவு உடைத்து வீட்டில் இருந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்தக்கொள்ளை சம்பவம் குறித்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியின் வீடுகள் மற்றும் தெருக்களில் இருந்த சிசிடிவி கட்சி பதிவுகளை கொண்டு கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக கொள்ளையர்களை பிடிக்க முடியாத நிலையில் சிசிடிவி காட்சிகளை கொண்டு தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியை சேர்ந்த கோகுல் மற்றும் ஆகாஷ் ஆகிய இரண்டு சிறுவர்களும் லட்சுமிபுரம் பகுதியில் கட்டிடப் பணிகளுக்காக வந்தது தெரியவந்தது.
Earthquake: தொடர் நிலநடுக்கங்கள்… 21 ஆம் நூற்றாண்டில் உலகை உலுக்கிய கொடிய நிலநடுக்கங்கள் பட்டியல்!
அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் சிறுவர்கள் என்பதால் அவர்கள் பகுதிக்கு சென்று நோட்டமிட்டு கண்காணித்த போது லட்சுமிபுரம் பகுதியில் வீட்டை உடைத்து பணம் கொள்ளை அடித்தது சிறுவர்கள் தான் என உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து இருவரையும் பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்களின் வீட்டில் இருந்த 95 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினார்.
MNM : கஷ்டப்படும் கல்லூரி மாணவிகள்: கேரளாவை பின்பற்றுங்க! - தமிழ்நாடு அரசுக்கு மநீம வேண்டுகோள்!
இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் தென்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதில் கோகுல் என்றவருக்கு 18 வயது முடிவடைந்ததால் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் பெரியகுளம் கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் ஆகாஷ் என்ற சிறுவனுக்கு 17 வயது என்பதால் தேனி சிறார் நீதிமன்றத்தில் நிறுத்தி அச்சிறுவனை நீதிபதி உத்தரவின் பேரில் 15 நாட்கள் மதுரை சிறார் சிறையில் காவல்துறையினர் அடைத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்