காதலர் தின வாரத்தின் இரண்டாம் நாளான ஒன்று ப்ரோபோஸ் டே (Propose Day)இன்று கொண்டாடப்படும் நிலையில், இன்றைய நாளில் உங்கள் காதலன்/ காதலிக்கு எப்படியெல்லாம் மகிழ்ச்சியை கொடுக்கலாம் என காணலாம்.


வருடம் 365 நாட்கள் காதலர்களுக்கு இடையே அன்பு இருந்தாலும், காதலர் தின வாரம் என்பது எப்போதும் ஸ்பெஷல் தான். காரணம் பிப்ரவரி 14 ஆம் தேதி தான் காதலர் தினம் என்றாலும் ஒரு வாரம் முன்னதாகவே காதலர் தினத்திற்கான கொண்டாட்டங்கள் தொடங்கி விடும். நேற்று Rose Day  கொண்டாடப்பட்ட நிலையில், இன்று ப்ரோபோஸ் டே (Propose Day) கொண்டாடப்படுகிறது. எப்படியெல்லாம் காதலிக்கலாம் என யோசிப்பவர்கள், காதலை சொல்லும் போது பல நேரங்களில் சொதப்புவது உண்டு. சினிமா, கதைகளில் வருவது போல இப்படியெல்லாம் காதலை சொல்லலாம் என நினைத்து கடைசியில் நினைத்தது ஒன்று.. நடந்தது ஒன்று.. கதை தான். 


அப்படி உங்கள் வாழ்க்கையில் நடந்திருந்தால் கவலையை விடுங்கள். இந்த ப்ரோபோஸ் டேவில் உங்கள் காதலன்/ காதலியை கிஃப்ட் அல்லது அவர்களுக்கு /உங்களுக்கு பிடித்த முறையில் காதலை வெளிப்படுத்துங்கள். அதேசமயம் புதிதாக காதலிக்க நினைப்பவர்கள் இன்றே நீங்கள் விரும்பும் நபரிடம் காதலை தெரிவியுங்கள்.


இந்த நாளில் பலரும் நீண்ட நாட்களாக உங்கள் துணைவருக்கு ஏதாவது ஒரு பொருள் வாங்குவது அல்லது அவர்களுடனான நேரம் ஒதுக்குவது போன்ற பல நிகழ்வுகளை திட்டமிட்டிருப்பீர்கள். அதனை இன்று செய்து உங்கள் காதலை வெளிப்படுத்தலாம்.



  • எதிர்பாராத நிகழ்வுகளே காதலின் மறக்க முடியாத தருணம் என்பதால் காதலை வெளிப்படுத்துவதைப் பற்றி யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருங்கள். 

  • உங்கள் கைப்பட செய்த பொருள் தொடங்கி விலையுயர்ந்த பொருட்கள் வரை பரிசளித்து காதலை தெரிவிக்கலாம்.

  • சினிமாவில் வரும் வசனமோ, பிறர் பேசுவதை பார்த்தோ உங்கள் துணையிடம் காதலை சொல்லாதீர்கள். உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை வெளிப்படுத்துவதே சிறப்பானது. காரணம் காதலில் வார்த்தைகள் என்பது மிக முக்கியம். நீங்கள் பேசப்போகும் பேச்சில் தான் எவ்வளவு அன்பு நிறைந்திருக்கிறது என்பதை அறியலாம். 

  • திருமணமானவர்களும் உங்கள் பார்ட்னரை சர்ப்ரைஸ் செய்யலாம். ஆண்டுகள் பல கடந்தாலும் மாறாத அந்த காதல் இன்னும் உங்கள் உறவில் சிறப்பாக அமையும். 

  • பலரும் காதலை நேரில் சொல்ல முடியாமல் போனில் அல்லது அடுத்தவர்கள் மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கிறார்கள். ஆனால் இவற்றையெல்லாம் விட நேரில் சென்று ப்ரோபோஸ் செய்வதே சரியான ஒன்று.

  • தொலை தூரத்தில் இருப்பவர்கள் சரியான வாக்கியங்கள் அமைந்த க்ரீட்டிங் கார்டு, புகைப்படங்களை உங்கள் துணைவருக்கு அனுப்பி காதலை வெளிப்படுத்தலாம். 

  • காதலை சொல்லும் இடம் ரொம்ப முக்கியம். அது உங்கள் துணைக்கு பிடித்த இடம் என்றால் இன்னும் நெருக்கமாக இருக்கும். அதனால் சரியான இடம், சரியான நேரத்தில் காதலை தெரிவியுங்கள். 


காதலை சொல்வது எப்போதும் தப்பே இல்லை. ஆனால் நீங்கள் நினைக்கும் நபர் உடனே உங்களை காதலை ஏற்க வேண்டும் என்று எதிர்பார்க்கவும் கூடாது, கட்டாயப்படுத்தவும் கூடாது.