போடி அருகே குடும்ப பிரச்னையில் கிணற்றில் குதித்து குடும்பத்துடன் தற்கொலை செய்ய முயன்றதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தது. கணவன், மனைவி, மகன் ஆகிய மூன்று பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Earthquake: தொடர் நிலநடுக்கங்கள்… 21 ஆம் நூற்றாண்டில் உலகை உலுக்கிய கொடிய நிலநடுக்கங்கள் பட்டியல்!
தேனி மாவட்டம் போடி அருகே பொட்டிப்புரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் முருகன் மகன் ராமராஜ் (32). இவரது மனைவி வீரமணி (25). இவர்களது மகன் ராஜபாண்டி (6), ஈசாஸ்ரீ (4), ஜீவிதா ஸ்ரீ (2). ராமராஜ் குடும்பத்துடன் கேரள மாநிலம் பாரத்தோடு அருகே காரித்தோடு என்ற இடத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. சிறிது காலம் பிரிந்து வாழ்ந்துள்ளனர்.
பெற்றோர் சமாதானப்படுத்தி அனுப்பியதன் பேரில் கேரளத்தில் தங்கி வேலை செய்து வந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் குல தெய்வக் கோவிலில் மொட்டை எடுப்பதற்காக மீண்டும் பொட்டிப்புரம் வந்துள்ளனர். கோவிலுக்கு சென்று மொட்டை எடுத்துவிட்டு வந்து கேரளத்துக்கு செல்ல தயாராகி வந்த நிலையில் மீண்டும் கணவன் மனைவிக்கிடையே குடும்பச் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதில் செவ்வாய்க்கிழமை மாலை வீரமணி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு அருகே உள்ள தோட்டப் பகுதிக்கு சென்றுள்ளார். இந்திரா காலனி அருகே கிருஷ்ணசாமி என்பவரது கிணற்றில் குழந்தைகளை தள்ளிவிட்டு வீரமணியும் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இவர்களை தடுப்பதற்காக வந்த ராமராஜூம் இதனைக் கண்டு தற்கொலைக்கு முயன்று கிணற்றில் குதித்தார். 70 அடி கிணற்றில் தண்ணீர் இல்லாததால் 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.
MNM : கஷ்டப்படும் கல்லூரி மாணவிகள்: கேரளாவை பின்பற்றுங்க! - தமிழ்நாடு அரசுக்கு மநீம வேண்டுகோள்!
5 பேரும் கிணற்றில் விழுந்தது கண்டு அருகில் தோட்டங்களில் வேலை செய்தவர்கள் கொடுத்த தகவலின்பேரில் போடி தீயணைப்பு துறையினர், போடி தாலுகா காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து 5 பேரையும் பலத்த காயங்களுடன் மீட்டனர். 5 பேரும் 108 அவசர ஊர்தி மூலம் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஈசாஸ்ரீ (4), ஜீவிதாஸ்ரீ (2) ஆகியோர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்ற மூன்று பேரும் ஆபத்தான நிலையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்