காதலர் தின வாரத்தில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் நாள் டெடி டே, அந்த நாளில் ஒருவருக்கொருவர் டெடி பொம்மையை பரிசாக கொடுத்து கொண்டாடுவார்கள்.


பிப்ரவரி மாதம் என்றாலே நினைவுக்கு வருவது காதலர் தினம். காதலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடுவதற்கு முன் அந்த வாரம் முழுவதும் காதலர் தின வாரமாக கொண்டாடப்படுகிறது. இந்த வாரத்தில் காதலர்கள் ஒருவருக்கொருவர் சாக்லேட், பூக்கள், க்ரீட்டிங் கார்டு போன்ற பரிசுகளை பரிமாரிக்கொள்வர்.


சிலர் தங்கள் அன்புக்குரியவர்களை இரவு உணவிற்கு அழைத்துச் செல்வார்கள், மற்றவர்கள் அதை அவர்கள் விரும்பியபடி கொண்டாடுவார்கள். ஆனால், காதலர் தினம் ஒரு நாளில் மட்டும் கொண்டாடப்படுவதில்லை. இது காதலர் தின வாரம் எனப்படும் ஒரு வாரம் முழுவதும் நீடிக்கும். காதலர் தினத்திற்கு முன்பு, ரோஸ் டே, ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே மற்றும் கிஸ் டே போன்றவற்றை கொண்டாடுவார்கள். மேலும் அன்பின் நாட்காட்டியில் மேள் குறிப்பிட்ட ஒவ்வொரு நாளும் அதன் சொந்த முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.


டெடி டே: 


டெடி டே என்பது காதலர் தின வாரத்தின் நான்காவது நாள். பெரும்பாலான காதலர்கள் ஒருவருக்கொருவர் டெடி பியர் அல்லது ஏதேனும் மென்மையான பொம்மைகளை (soft toys) கொடுத்து இந்த நாளை கொண்டாடுவார்கள். உங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஒரு மென்மையான பொம்மையை பரிசளிப்பது அவர்கள் உங்களுடன் செலவழித்த பொன்னான தருணங்களையும் நேரத்தையும் அவர்களுக்கு நினைவூட்டும். இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10 அன்று அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்படுகிறது. மேலும் இது இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான ஒன்றாகும். வாழ்த்து அட்டை போன்ற மற்றொரு அபிமான பரிசுடன் உங்கள் டெடியை இணைக்கலாம். 


நாள் 1 ரோஜா தினம் - பிப்ரவரி 7


நாள் 2 ப்ரொப்போஸ் டே -  பிப்ரவரி 8


நாள் 3 சாக்லேட் தினம் -  பிப்ரவரி 9


நாள் 4 டெடி டே - பிப்ரவரி 10


நாள் 5 ப்ராமிஸ் டே - பிப்ரவரி 11


நாள் 6 ஹக் டே - பிப்ரவரி 12


நாள் 7 முத்த நாள் பிப்ரவரி 13


நாள் 8 காதலர் தினம் பிப்ரவரி 14 


டெடி பொம்மைகள் பல தலைமுறைகளாக பிரபலமான பரிசுப் பொருளாக இருந்து வருகின்றன. மேலும் அவை அப்படியே இருக்கின்றன. டெடி பொம்மைகள் அழகாகவும், அரவணைப்பாகவும், ஆறுதலாகவும் இருப்பதே அவர்களின் பிரபலத்திற்குக் காரணம். ஒரு நபர் தான் உணரும் அன்பு மற்றும் அக்கறையின் சரியான பிரதிநிதித்துவம் அவை. டெடி பியர் ஒன்றை பரிசளிப்பதன் மூலம், ஆறுதலையும் பாதுகாப்பையும் வழங்குவதைப் போல, அவர்கள் தங்கள் அன்புக்குரியவரைக் கவனித்துக்கொள்வதாகவும், அவர்களுடன் எப்போதும் இருக்க விரும்புவதாகவும் கருதப்படுகிறது. 


டெடி பொம்மைகள் பெரும்பாலும் அண்டை நாடுகளில் பிரபலமாக இருந்தாலும் உலகம் முழுவதும், இந்தியாவிலும் இந்த வழக்கம் தொடர்ந்து வருகிறது.  தங்கள் அன்பிற்குரியவர்களிடம் அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒரு டெடியுடன் சாக்லேட் சேர்த்துக் கொடுக்கலாம். உங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் டெடி பொம்மையும் பெரியதாக இருக்கலாம்.  டெடி டே தொடர்ந்து ப்ராமிஸ் டே அனுசரிக்கப்படுகிறது.