விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகள் அஸ்லிக்கும் கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் அடுத்த மேல்மாம்பட்டு சேர்ந்த அமிர்தலிங்கம் என்பவரின் மகன் சக்திவேலுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடந்தது.


திருமண நிச்சயத்தின்போது தங்கள் மகன் சக்திவேல் விழுப்புரம் அரசுக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருவதாக பெண் வீட்டாரிடம் சக்திவேலின் குடும்பத்தினர் கூறி உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சக்திவேல் கூறியது பொய் என்பதும் விழுப்புரம் கலைக்கல்லூரியில் அவர் வேலை செய்யவில்லை என்பதும் மனைவி அஸ்லிக்கு தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அஸ்லி, கணவர் சக்திவேலிடம் கேட்டபோது மழுப்பலான பதிலளையே அளித்துள்ளார்.


’’சமோசாவுக்குள் பல்லியை வைத்து கொடுத்த பேக்கரி...!’’- சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை...




 


இப்பிரச்னை தொடர்பாக போலி பேராசிரியர் சக்திவேலுவுக்கும் மனைவி அஸ்லிக்கும் அடிக்கடி பிரச்சினைகள் நாளுக்குநாள் அதிகரித்து வந்த நிலையில், ஆத்திரமடைந்த போலி பேராசிரியர் சக்திவேல் தனது மனைவி அஸ்லியை தகாத வார்த்தையால் திட்டியதுடன் செருப்பால் அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். மேலும் அஸ்லிக்கு போலி பேராசிரியர் சக்திவேல் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. போலி பேராசிரியர் சக்திவேலின் இந்த கொடூர செயலுக்கு தம்பி சண்முகவேல், தாய் சாந்தி, தந்தை அமிர்தலிங்கம் ஆகியோரும் உடந்தையாக இருந்ததால் பாதிக்கப்பட்ட அஸ்லி, தனது கணவரான போலி பேராசிரியர் சக்திவேல் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



அஸ்லி கொடுத்த புகாரின் அடிப்படையில் மேல்மாம்பட்டு கிராமத்தில் வசித்து வரும் போலி பேராசிரியர் சக்திவேல் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த சென்ற பெண் காவலரை சக்திவேலும் அவரது நண்பர்களும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் ஒருமையில் திட்டிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது.


‘’அதில் நான் நினைத்தால் உன்னை தண்ணீ இல்லாத காட்டுக்கு இப்பவே மாத்திடுவேன், என்னால் உன்னை ஒன்றும் செய்ய முடியாது ஒழுங்கா இங்கிருந்து போய்விடு’’ என ஒருமையில் தரக்குறைவாக பெண் காவலரை சக்திவேல் பேசியது பொதுமக்கள் மட்டும் அல்லாமல் காவல்துறையினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.



பேராசிரியர் எனக்கூறி பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்டுவிட்ட விசாரிக்க வந்த பெண் போலீசை தரக்குறைவாக பேசிய சக்திவேல் மற்றும் அவருடைய குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும் என சமூகவலைத்தளங்களிலும் கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் போலி பேராசிராசியர் சக்திவேல் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 


தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் 11 சவரன் அபேஸ்...! - மாயாஜால திருடன் கைது...!